பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

speech synthesis

1365

spider


speech synthesis : பேச்சு பிரித்தறிதல்;பேச்சுருவாக்கம் : குறிப்பிடப்பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மையான சொற்கள், சொற்றொடர்களாகவும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப் படுத்தித் தருவது.

speech synthesizer : பேச்சு பிரிக்கும் பொறி;பேச்சுருவாக்கி : எண்முறைக் குறியீட்டை புரிந்து கொள்ளக்கூடிய பேச்சாக மாற்றும் சாதனம். குறியீட்டை ஒலிபெருக்கி மூலம் அனுப்பி செயற்கை மனிதக்குரலாக பேச வைக்கிறது.

speed : செயல் வேகம்.

speed buffering : வேக இடையீடு : உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையிலான வேக வேறுபாடுகளை ஈடு செய்யக்கூடிய உத்தி. இடை யீட்டில் தரவுகள் அதிகவேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறைந்த வேகத்தில் வெளியிடப்படுகிறது அல்லது குறைந்த வேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதிவேகத்தில் வெளியிடப்படுகிறது.

speed of electricity/light : மின்விசை/ஒளிவேகம் : ஏற்றத்தாழ வினாடிக்கு 2, 99, 311 கி. மீ. வேகம்.

speed of light : ஒளியின் வேகம்;ஒளி வேகம் : ஒளி பயணம் செய்யும் வேகம். ஒரு நொடிக்கு 2, 99, 768 கி. மீ. கள் என்பது கணினிகளுக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையில் தரவுகளை அனுப்புவதற்கு ஆகும் நேரம்.

spell checker : சொற்பிழை திருத்தி;சொல்திருத்தி.

spelling checking : சொல் பிழை திருத்தம் : சொல் செயலகத்துடன் தொடர்புள்ள கணினி நிரல் தொடர். ஒரு சொற்பட்டியலுடன் தட்டச்சு செய்யப்பட்ட சொற்களை ஒப்பிட்டு எழுத்துப் பிழைகளைக் கூறுவது.

spew : கக்கல்;உமிழ்வு : இணையத்தில் அளவுக்கதிகமான எண்ணிக் கையில் மின்னஞ்சல் செய்திகளையோ, செய்திக் குழுக் கட்டுரைகளையோ வெளியிடல்.

spider : சிலந்தி : இணையத்தில் புதிய வலை ஆவணங்களைத் தேடி அவற்றின் முகவரிகளையும் உள்ளடக்கத் தகவலையும் ஒரு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கும் தானியங்கு நிரல். குறிப்பிட்ட கால இடைவெளி யில் தானாகவே இப்பணியைச் செய்து கொண்டிருக்கும். தேடு பொறிகள் மூலம் இத் தரவுத்தளத்தின் வாயிலாக வேண்டிய தரவுகளை எளிதாகத் தேடிப் பெறலாம். சிலந்தி நிரல்களை