பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spider configuration

1366

spoofing


இணைய எந்திரன் (Internet Robot) என அழைக்கலாம்.

spider configuration : சிலந்தியுரு அமைப்பு : விநியோகிக்கப்பட்ட அமைவில் ஒரு வகை. இதில் பல்வேறு கட்டமைப்பு கணிப்பு அமைப்புகளின் நடவடிக்கைளை ஒரு மையக்கணினியமைவு கண்காணிக்கிறது.

spike : மின் துள்ளல் : குறுகிய உச்சமடையும் குறைந்த நேர வோல் டேஜ். திடீரென மின்சாரம் அதிகரிப்பது.

spindle : சுழல் முனை;சுழல் தண்டு : ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல் முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட்டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும்.

spindle motor : சுழல் தண்டு;விசைப் பொறி.

spin rate : சுழல் வேகம்.

spinwriter : சுழல் எழுது பொறி;சுழல் எழுதி : ஒரு குறிப்பிட்ட வகையான உயர்தர கணினி அச்சுப்பொறி.

spline : இசைவான வளைவு : கணினி வரைகலையில் வருவது. கணிதமுறையில் எளிதானதும் பிரிந்திருக்கும் தரவுப் புள்ளிகளைச் சேர்ப்பதற்கு அழகிய வழி. தரவுப் புள்ளிகளிடையே அழகிய விளைவு களையும் பரப்புகளையும் உருவாக்கப் பயன்படுவது மட்டுமல்லாது அளவுகோல்களுக்கிடையே நகர்த்தவும் பயன்படுவது. உயிர்ப் படங்களில் முக்கிய பின்னணிகளை விளக்கப் பயன்படுவது.

split : பிரி.

split bar : பகுத்த பட்டை;பிரிந்த பட்டை.

split cell : கலம் பிரி.

spliting a window : சாளரத்தைப் பிரித்தல்;பலகணிப் பகுப்பு;சாளரப் பகுப்பு : ஒரு பல கணியை இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பாளங் களாகப் பகுத்தல்.

split screen : பகு திரை.

split table : அட்டவணை பிரி.

split window : பிரிந்த பலகணி;பகு சாளரம் : Split Screen போன்றது.

spoken media : பேச்சு ஊடகம்.

spooting : ஏமாற்றுதல் : இணையத்தில் ஒரு தரவு, அனுமதி பெற்ற பயனாளர் ஒருவரிடமிருந்து அனுப்பப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உரு