பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spool

1367

spread sheet


வாக்குதல். எடுத்துக்காட்டாக, ஒரு பிணையத்தில் அனுமதி பெற்ற பயனாளர் ஒருவரின் ஐபீ முகவரியைக் காட்டி ஏமாற்றி உள்ளே நுழைதல் ஐபீ-ஏமாற்றல் எனப்படுகிறது.

spool : சுருணை;சுருள் : 1. காந்த நாடா சுருணை. 2. காந்த நாடாவைச் சுருட்டுவது.

spooler : சுருளி : வேறு வேலைகளைச் செய்து கொண்டே அச்சுப் பொறியில் வன்படியை உருவாக்க கணினியை அனுமதிக்கும் நிரல் தொடர் அல்லது வெளிப்புறச் சாதனம்.

spooling : சுருட்டல் : 1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரேநேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுதல். 2. அமைப்பின் வேறொரு பகுதி அதை செயலாக்கத் தயாராகும்வரை நாடா கோப்பு அல்லது வட்டில் தரவுகளை தற்காலிகமாக சேமிக்க அனுமதிப்பது.

spot : புள்ளி;குறியிடம் : ஒரு போஸ்ட்-ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியில் ஒளி-நிழல் வேறுபாட்டு செயலாக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு கலவைப் புள்ளி. ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் (pixel) சாம்பல்நிற அளவைச் சரியாக வெளிப்படுத்த குறிப்பிட்ட தோரணியில் பல புள்ளிகள் ஒரு குழு வாக இடம் பெறுகின்றன.

spot colour : குறியிட நிறம்;புள்ளி நிறம் : ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழி முறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரை யறுத்து விட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு குறியிட நிறத்துக்கும் அச்சுப்பொறி ஒவ்வொரு அடுக்காக அச்சிடும்.

spot function : குறியிடச் செயல்பாடு : ஒளி-நிழல் வேறுபாட்டு அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வகைத் திரைக்காட்சி உருவாக்கப் பயன்படும் போஸ்ட்ஸ்கிரிப்ட் செயல்முறை.

spray can : தெளிப்பான்;பெயின்ட் பிரஸ் : பெயின்ட் போன்ற ஒரு வரைவோவிய பயன்பாட்டு மென்பொருளில் படிமம் ஒன்றில் புள்ளிகளின் தோரணியை உருவாக்கப் பயன்படும் கருவி.

spread sheet : அகலத்தாள்;விரிதாள் : சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல்