பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spreadsheet package

1368

sprocket feed


தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில் புகழ் பெற்றவை.

spreadsheet package : விரிதாள் தொகுதி.

spreadsheet compiler : விரிதாள் தொகுப்பி : உருவாக்கிய விரிதாள் தொகுதியில்லாமல் இயங்குகிற விரிதாள்களை தனி நிலைச் செயல் முறைகளாக மொழி பெயர்க்கிற மென்பொருள்.

spreadsheet programme : விரிதாள் நிரல் : வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணிகளைச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. தரவு மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படுகின்றன. வாய்பாடுகள் மூலம் தரவுகள் உறவுபடுத்தப்படுகின்றன. ஒரு கலத்தில் இருக்கும் மதிப்பினை மாற்றினால் தொடர்புடைய அனைத்துக் கலங்களிலுமுள்ள மதிப்புகள் மாற்றப்படும். விரிதாள் பயன்பாடுகள் பெரும்பாலும் வரைபட வசதிகளை யும் கொண்டிருக்கும். உரை, எண் மதிப்புகள் மற்றும் வரைபடங்களுக்கான எண்ணற்ற வடிவமைப்பு (formating) வசதிகளைக் கொண்டிருக்கும்.

spread spectrum : அகல் ஒளிக்கற்றை : அனுப்பு மற்றும் ஏற்புச் சாதனங்கள் இரண்டிலும் உள்ள தனிவகைத் தோரணிக்கேற்ப ஊர்தி அலைவெண்ணைத் தொடர்ச்சியாக மாற்றுகிற வானொலி அனுப்பீடு. ஒரே இடப்பரப்பில் பன்முகக் கம்பியில்லா அனுப்பீடுகளை அனு மதிப்பதற் காகவும் பாதுகாப்புக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

spring tension : வில் இழுவிசை.

sprites : வில் இழுப்பிசை : முகப்பில் உள்ள பிறசெய்திகள் அல்லது வரைபடங்களோடு தொடர்பின்றி சுயேச்சையாக நகர்த்தக்கூடிய அதிக துல்லியம் உள்ள பொருள்கள். திரையில் உள்ள பொருள்களின் முன்பாக அல்லது பின்புறத்தில் நகர்ந்து தன்னுடைய அளவு மற்றும் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடியது. உயிர்ப்பட தொடர்களை உருவாக்க உதவுவது.

sprocket feed : பற்சக்கரச் செலுத்துகை : அச்சுப்பொறியில் தாளினை உட்செலுத்தும் அமைப்பு. பற்சக்கரம் போன்ற அமைப்பு தாளின் துளைகளில்