பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

standard deviation

1373

standby time


படுத்தத் தயாராய் உள்ள ஒரு செயல்கூறு.

standard deviation : செந்தரச் சாய்வு : ஒரு தரவுத் தொகுதியினுள் உள்ள தரவு இனங்களின் கோட்டமுறும் அளவு. தரவுகளின் பகிர்மானம் இயல்பாக இருக்குமானால், தரவுகளின் 68%, செந்தரச் சாய்வுக்கு ஒன்று கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்;95%, செந்தரச் சாய்வுக்கு மூன்றுக்குள் இருக் கும். ஆங்கிலச் சுருக்கம் : STDEV.

standards enforcer : தரம் அமல்படுத்துபவர்;செந்தர நடைமுறைப் படுத்தி : குறிப்பிட்ட நிரல் தொடரின் தரங்களும் நடைமுறைகளும் கடைப் பிடிக்கப்பட்டனவா என்று முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினி நிரல் தொடர்.

standard interface : செந்தர இடைமுகம் : மையச் செயலக அலகுடன் அனைத்து வெளிப்புறச் சாதனங்களும் இணைக்கப்படும் செந்தரமான பருப்பொருள் வழிமுறை.

standardise : செந்தரப்படுத்தல்.

standardist : செந்தரப்படுத்து : செந்தரங்களை உருவாக்குதல் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட செந்தரங்களுக்கு ஏற்றதாக்குதல்.

standardization : தர அளவுப்பாடு;தரப்படுத்தல்.

standard mode : செந்தரச் செயல் வகை : பலகணிச் செயற்பாட்டுச் செயல்வகை.

standard newsgroup hierarchy : இயல்பான செய்திக்குழு படிநிலை.

standard output : திட்ட அளவு வெளிப்பாடு.

standard parallel port : இயல்பான இணைநிலைத் துறை.

standards : செந்தர வரையேடுகள்.

standard tool bar : மரபுநிலைகக் கருவிப் பட்டை.

standard type : திட்ட அளவு.

standard width : இயல்பான அகலம்.

stand lay button : மாற்றுப் பொத்தான்.

standby equipment : மாற்று ஏற்பாட்டுக் கருவி;மாற்றுச் சாதனம் : முக்கிய கருவி எழுப்பும் கோளாறினால் செயல்படாமல்போனால் மாற்று ஏற்பாடாகப் பயன்படக்கூடிய இரண்டாவது கருவி.

standby time : மாற்று ஏற்பாட்டு நேரம்;காத்திரு நேரம் : 1. ஒரு கருவியிடம் கேள்வி கேட்டு அதனிடமிருந்து பதில் பெறுவதற்கு இடையிலான நேரம். 2. ஒரு கருவியை நிறுவுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் இடையிலான நேரம்.