பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1375


start

1375

startup disk

கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம்.

start : தொடக்கம்; தொடங்கு : விண்டோஸ் இயக்க முறையில் பணிப்பட்டையில் (Taskbar) உள்ள பொத்தான் இதிலிருந்து தான் பணிகளைத் தொடங்க வேண்டும்.

starting cluster : தொடக்கத் தொகுதி : ஒரு வட்டில் ஒரு கோப்பு எதிலிருந்து பதிவு செய்யப்படுகிறதோ அந்தத் தொகுதி. கோப்பின் விவரத் தொகுதிப் பதிவு, தொடக்கத் தொகுதியைக் குறிக்கிறது. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை, கோப்பினால் பின்னர் பயன்படுத்தப்படும் தொகுதிகளைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது.

starting point : தொடக்கப் புள்ளி : பயனாளர்கள் வலைத் தளங்களைப் பார்வையிட உதவுவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வைய விரிவலை ஆவணம். பெரும்பாலும், தேடுபொறி போன்ற கருவிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத் தளங்களுக்கான மீத்தொடுப்புகளையும் இந்த ஆவணம் கொண்டிருக்கும்.

start menu : தொடங்கு பட்டி .

start/stop transmission தொடக்க/நிறுத்த அனுப்பீடு : கால இசைவற்ற அனுப்பீடு என்பதும் இதுவும் ஒன்றே.

startup : ஆரம்பித்தல் ; தொடங்கல் : சரியான ஆரம்ப நிலைகளில் கணினி அமைவுச் சாதனங்களைத் துவங்கி பொருத்தமான மின் சக்தியை ஏற்றுதல்.

startup application : தொடக்கப் பயன்பாடு : கணினி இயக்கப்பட்டவுடன் கணினியின் கட்டுப்பாடு முழுமையையும் எடுத்துக் கொள்ளும் பயன்பாடு.

STARTUP. CMD : ஸ்டார்ட்அப் சிஎம்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில் தொடக்க இயக்க வட்டில் மூலக்கோப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பயன்தொகுதிக் கோப்பு. எம்எஸ்டாஸில் இதற்கு இணையான கோப்பு ஆட்டோ இஎக்ஸ்இசி. பேட்

startup disk : ஆரம்பிக்கும் வட்டு : கணினி அமைப்பைத் துவக்குவதற்கு வேண்டிய தகவலைக் கொண்டுள்ள வட்டு (diskette).