பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

battery backup

137

Baum. L. Frank


மின்கலத் தொகுதி, ஒரு மாற்று மின்சார வழங்கியாகப் பயன் படுகிறது. கையேட்டுக் கணினி மற்றும் மடிக் கணினிகளுக்கு இத்தகைய மின்சார வழங்கிகளே (நிக்கல் கேட்மியம், நிக்கல் மெட்டல் ஹைடிரைடு, லித் தியம் அயான் மின் வழங்கிகள்) பயன்படுத்தப்படுகின்றன. கணி னிக்குள் இருக்கும் கடிகாரம், அழியா நினைவகத்தின் ஒரு பகுதி (முக்கிய முறைமைத் தகவல்கள் பதியப்பட்டுள்ள சீமாஸ் பகுதி) ஆகியவை எப்போதும் மின்சாரம்பெற இந்த மறு மின்னூட்ட மின் வழங்கிகள் பயன்படுகின்றன.

battery backup : காப்பு மின்கலம்; மின்கல பின்னாதரவு; மாற்று மின்கல அடுக்கு : மின் தடங்களின்போது மாறி வரும் தகவலை கணினி இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப் படும் துணை மின்சக்தி.

battery meter : மின்கல மானி : ஒரு மின்கலத்தின் மின்னோட் டத்தை (திறனை) அளக்கப் பயன் படும் கருவி.

baud : பாட் : செய்தி வேகம் : தகவல் அனுப்பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு.

baudot code : பாடாட் குறி முறை : ஒரு எழுத்தை ஐந்து துண்மிகள் மூலம் குறிப்பிட்டு தரவுகளை அனுப்பும் ஒரு குறியீட்டு முறை. பல தொலை அச்சு அமைப்புகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு தந்தி முறை குறியீட்டு எண் என்றும் அழைக்கப் படுகிறது. 1950இல் இந்த குறியீட்டு முறையே பன்னாட்டுத் தந்தித் தொடர்புக்கான தர நிர்ணயங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.

Baudot. Emile : பாடாட் எமிலி : பாடாட் குறியீட்டுதந்தி முறையை 1880-இல் கண்டுபிடித்த முன்னோடி.

baud rate : பாட் வீதம் : செய்தியனுப்பும் வேக வீதம் : தரவு அனுப்புதலின் வேகத்தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃபிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளரான ஜே. எம். இ. பாட் என்ப வரின் பெயர் இடப்பட்டது.

Baum. L. Frank பாம் எல். ஃப்ராங்க் : எந்திரங்களை ஒரு நன்மை தரும் சக்தியாகக் கருதி இந்த நூற்றாண்டின் நன்னம்பிக்கையில் பங்கேற்றவர். அவரது புகழ் பெற்ற ஒஇஸ்ட் வரிசை நூல்களில் வரும் டிக்டாக் என்பவன் கடிகாரம் போன்று