பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

staus line

1380

step-frame


இலக்கங்கள் அல்லது பிற எழுத்துகள் சேர்ந்த சரம். பழைய கணினி நிரல்களே குறிமுறைகளைப் பயன்படுத்தின. இப்போதைய மென்பொருள்கள் பலவும் சொற்கள், படங்கள் வழியாக நிலைமை யைச் சுட்டுகின்றன. யூனிக்ஸில் செயல்தளக் (shell) கணக்கு வைத்திருப்பவர்கள், வலையில், எஃப் டீபீயில் பணிபுரியும்போது நிலைமைக் குறிமுறைகளைக் கண்டிருக்கலாம்.

status line : இணைப்பு நிலை : நடப்பு நடவடிக்கையினைக் காட்டும் திரையில் காட்டப் படும் தரவுக் கோடு.

status message : தகுநிலைச் செய்தி : வன் பொருள் சாதனங்களினால் அவற்றின் நடப்புச் செயற்பாட்டுச் சூழலில் அளிக்கப்படும் பொதுவாகக் கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு செய்தி. ஒரு அச்சுப் பொறியில் இத்தகைய செய்திகள், "ஆயத்தம்", "காகிதத்திற்கு வெளியே", "நேரடியாக" போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

status register : தகுநிலைப் பதிவகம் : ஒரு சாதனத்தின் நடப்புத் தகுநிலையை விவரிக்கிற ஒரு துண்மித் தோரணியைக் கொண்டிருக்கும் ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி.

status report : தகுநிலை அறிக்கை : தகுதி அறிக்கை : திட்டச் செலவுகள் மற்றும் திட்டத்திற்கு ஆனநேரம் ஆகியவற்றை ஆராய்வது, மாறுபாடு களைக் கணக்கிட்டு காட்டப்படும்.

step : படி : 1. கணினியை ஒரு நிரலை செய்ய வைப்பது. 2. கணினி வாலாயத்தில் ஒரு நிரல்.

step-by-step telephone exchange : படிப்படித் தொலைபேசி இணைப்பகம் : பொதுத் தொலைபேசி இணைப்பகங்களுக்காக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட தானியங்கிப் பொறியமைவு. இதில், ஒரு குறிப்பிட்ட இணைப் பினைத் தேர்ந்தெடுப்பது பத்துக்கு ஒன்று என்ற தேர்வு முறைப்படி நடைபெறுகிறது. 1, 00, 000 இணைப்புகளுக்கு அணுகுதல் ஏற்படுத்துவதற்கு, இறுதித் தேர்வுக் கருவிக்கு முன்னதாக ஒரு தேர்வுக்கருவிக் குழுமநிலை அமைக்கப்படுகிறது.

step counter : படி எண்ணி.

step-frame : படிநிலைச் சட்டம் : ஓர் ஒளிக்காட்சிப் படிமத்தை ஒரு நேரத்தில் ஒரு சட்டம்வீதம் பதிவு செய்யும் செயல்முறை. நிகழ் நேரத்தில் தொடர்நிலை ஒளிக்காட்சிப் படிமங்களைப்