பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1386


stored programme

1386

straight line code

stored programme computer : நிரல் தொடர் சேமிக்கப்பட்ட கணினி : உள்ளார்ந்த சேமிப்பு நிரல்களின் தொடர்களைச் செயல்படுத்தும் திறனுள்ள கணினி. நிரல்களில் கூறியுள்ளபடி தரவுகளை மாற்றும் திறனுள்ளவை.

stored programme concept : சேமிக்கப்பட்ட நிரல்தொடர் கோட்பாடு; சேமிப்புச் செயல் முறைக்கோட்பாடு : கணினியின் உள்சேமிப்பகத்திற்குள் நிரல்களும், தகவல் மதிப்புகளும் சேமிக்க வருவது பற்றிய நிரல்களைத் தரும் கணினி. நிரல்களை விரைவாக அணுகி விரைவாக மாற்றமுடியும். 1945இல் ஜான்வோன் நியூமென் இக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இலக்கவியல் கணினியின் முக்கிய தன்மை இதுவே.

stored programme control : சேமிக்கப்பட்ட நிரல்தொடர் கட்டுப்பாடு : வோன் நியூமென் என்ற கணினி விற்பன்னரால் உருவாக்கப்பட்ட கணினிக் கொள்கை. 1940களில் இருந்த கணினிகள் குறிப்பிட்ட வேலைக்காக உருவாக்கப்பட்டவை என்பதால் அவைகள் மாற்ற முடியாதவை என்பதை வோன் நியூமென் உணர்ந்தார். மாற்றக்கூடிய நிரல்களை சேமிக்கக் கூடியவைகளாக கணினியால் முடியும் என்பதால் பல்வகையான பணிகளைச் செய்ய கணினியால் முடியும் என்று அவர் விளக்கினார். கணினி மென்பொருளின் தோற்றம் இதுதான்.

stored programme machine : பதிவான நிரல் தொடர் எந்திரம். சேமிப்பு நிரல் தொடர் எந்திரம்.

store, magnetic : காந்தச் சேமிப்பு.

STP : எஸ்டீபீ : உறையிட்ட முறுக்கிணை என்று பொருள்படும் Shielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுருள் மற்றும் செப்பு இழைகளால் பின்னப்பட்ட உறையுள்ள வடத்தினுள் ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகள் இருக்கும். கம்பிகள் முறுக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மின்இடையூறு இருக்காது. வெளியிலிருந்து வரும் இடையூறுகளிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உறைகள் பயன்படுகின்றன. எனவே நீண்ட தொலைவு, அதிவேக தரவு பரிமாற்றத்துக்கு இவ்வகை வடங்கள் உகந்தவை.

straight line code : நேர்வரிக் குறியீடு : ஒரு நிரல் தொடர் வரிசையை ஒவ்வொரு தடவை