பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

structure,file

1392

style manual


யவும்,கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப் பட்ட தொழில்நுட்ப மாநாடுகள் அல்லது விமர்சனங்கள்.திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப்பினர்களின் வேலைக்கான பொருளும் பிழை கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்ப முறையில் விமர்சிக்கப்படும்.

structure,file:கோப்புக் கட்டமைப்பு.

structure,tree:மரவுருக் கட்டமைப்பு.

STRUDL:ஸ்ற்றுடல்:Structural Design Languages என்பதன் குறும்பெயர். கட்டுமானங்களை வடிவமைத்து ஆராயும் நிரல் தொடர் மொழி.

stub:அடிநிலை:ஒரு நிரல் தொடர்கூறு இதற்குக் குறியீடு இன்னும் எழுதப்படவில்லை.அப்போதுள்ள நிலையிலேயே நிரல் தொடரை சோதிக்க வடிவமைக்கப்பட்டது.

stub testing:அடிநிலைச் சோதனை:மேலிருந்து கீழ் கூறு நிலைச் செயலாக்கம்.ஒரு சிறிய பொம்மை நிரல் தொடரை பெரிய நிரல் தொடரின் உள்ளே வேறோரு வாலாயத்துக்காக நுழைத்துப் பயன்படுத்துவது. அடிநிலை(ஸ்டப்)என்பது ஒரு சொற்றொடர் அளவு எளிதாக இருக்கலாம் அல்லது ஒரு நிரலாக இருக்கலாம்.சான்று:(Return)திரும்பு.

studies,feasibility:சாத்திய கூறாய்வு.

stuffit:ஸ்டஃப்பிட்:அலாவுதீன் சிஸ்டம்ஸ்,ஆப்டோஸ்,கலிஃ போர்னியாவின் மெக்கின்டோஷ் பங்குப் பொருள் நிரல் தொடர்.இது கோப்புகளை பலவகை நெகிழ்வட்டுகளாக சுருக்கித் தருகிறது.

style:பாணி:அச்சுப்பொறி வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் எழுத்துகளைக் குறிப்பிடும் பொதுப்பெயர்.பாணி என்பது சாய்வெழுத்து, தலை கீழாக்கல்-நிழல்,வெளிக் கோடு போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

style manual:நடை கையேடு:எந்த வகையான நூலையும் வெளி

யிடுவதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் மரபுகளைக் கூறும் பல நிறுவனங்கள் வெளியிடும் ஒரு புத்தகம்.சிறந்த எழுத்தச்சுகள் மற்றும் அச்சிடும் பழக்கங்கள் ஆகியவைகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குவதுடன் வெளியிடுவதற்காகத்