பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subdomain

1394

submenu


கின்றன. கோப்பகத்தின் உள் பிரிவினையாக உள்கோப்பகம் உருவாக்கப் படுகிறது.

subdomain : உள்களம்;கிளைக்களம்.

sub form data sheet : உள் படிவத் தரவுத் தாள்.

subfunction : துணைப் பணி : ஒரு செயலாக்க அமைப்பின் குறுக்கீடு செய்கின்ற பல பணிகளில் ஒன்று. ஒரு பணி எண் எப்போதும் எச்மீதே வைக்கப்படும் என்றாலும் துணைப்பணி எண்களைச் செயல்படுத்து வதற்குமுன் அவற்றை அல்லில் (AL) வைக்கப்படும்.

subject : உள்ளடக்கம்;உட்பொருள்;கருப்பொருள்.

subject tree : கருப்பொருள் மரம் : வைய விரிவலையில் தரவுகளை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப் படுத்தப்படும்முறை. ஒவ்வொரு வன்கயும் பல்வேறு கிளைகளாக உள் வகைகளாக பிரிக்கப் படும். அடிநிலையிலுள்ள கணுக்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்துக் கான தொடுப்பினைக் கொண்டிருக்கும். வைய விரிவலையின் கருப்பொருள் மரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு'யாகூ"தளத்தின் முகப்புப்பக்கப் பட்டியல்.

submarine cable : கடலடிக் கம்பி வடம்;நீர் மூழ்கிக் கம்பிகள் : கடல் அடியிலிருந்து எடுக்கப்படும் நீர்மூழ்கித் தரவுத் தொடர்புக் கம்பிகள் மிகுந்த தொல்லை தருவன. ஆழ்நீரின் அழுத்தங்களைச் சமாளிக்கக் குழாய்கள் சீரமைப்புகளுக்கு (refit) அதிக தாங்கும் சக்தி தேவைப்படும். 19ஆம் நூற்றாண்டில் ஆழ்கடல் தந்திக் கம்பிகள் போட்டது போலவே ஆரம்பகால நீர்மூழ்கி தொலை பேசிக் கம்பிகளும் போடப்பட்டன. தேவையான பாது காப்பை அளிக்க கனமான இரும்புக் கவசக் கம்பிகள் ஒன்று அல்லது மேற்பட்ட அடுக்குகளாக தரவுத் தொடர்புக் கம்பிகளின்மீது சேர்க்கப்பட்டன. மேம்பட்ட முறைகள் பின்னர் கடைப்பிடிக்கப்பட்டன.

submarining : நீர் மூழ்கி விடல் : மடிமேல் வைக்கும் கணினி போன்ற ஒரு மெதுவாகக் காட்டும் திரையில் சுட்டி (Cursor) நகர்வதைத் தற்காலிக மாகக் காண முடியாமல் போதல்.

submenu : துணைப்பட்டியல் : ஒரு பட்டியல் தேர்விற்குள் வாய்ப்புகளின் துணைப் பட்டியல். துணைப் பட்டிகளில் பல நிலைகள் இருக்கலாம்.