பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

suite

1397

super computer


suite : கூட்டுத் தொகுப்பு : நெருங்கிய தொடர்புள்ள நிரல் தொடர்களின் தொகுதி அல்லது குழு.

suitecase : சூட்கேஸ்; (கைப்பெட்டி) : மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன்கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக்கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத்தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்னத்துடன் காட்சியளிக்கும்.

sum : தொகை.

summarize : தொகுத்துக் கூறு : செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்களில் கருத்துக் கணிப்பு நடத்தி மின்னஞ்சல் மூலமாக கருத்துகளைச் சேகரித்து, முடிவுகளைத் தொகுத்து வெளியிடல்.

summary : சுருக்கம்;பிழிவு.

sun (Sun Microsystems) : சன் (சன் மைக்ரோசிஸ்டம்ஸ்) : கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நுண்செயலகக் கட்டு மானம் கொண்ட கோப்பு வழங்கிகள் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பிற விற்பனையாளர்களின் கணிப்பொறி அமைவுகளின் கட்டமைப்புகளின் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் திறந்த முறை மாதிரிகளை அது ஆதரிக்கிறது.

super : மீத்திறன்;மிகுதிறன்.

superalc : சூப்பரால்க் : கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. விரிதாள் நிரல் தொடர். விசிகால்சின் காலடித் தடங்களை சுற்றி 80-களில் அமைக்கப்பட்ட ஆரம்பகால விரிதாள்களில் ஒன்று. சூப்பரால்க் 5 (1988) முப்பரிமாண திறனை அளிப்பதுடன், மேம்பட்ட வரைகலை மற்றும் 256 விரிதாள்களோடு இணைக்கப்படுகிறது.

super computer : மீப்பெருங்கணினி;உயர் கணினி : கிடைக்கின்ற பெரு

முகக் கணினிகளில் மிகப்பெரிய, மிகவேகமான, மிகஅதிக விலையுள்ளது. அசாதாரண கணிப்பு சக்தி தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளில் பயன்படுவது. எண் விழுங்கிகள் என்றும் சில சமயம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை ஒரு நொடிக்கு