பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

superconducting

1398

super pipelining


இலட்சக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன. சில புதிய கணினிகள் ஒரு நொடிக்கு கோடிக்கணக்கான இயக்கங்களைச் செய்கின்றன.

superconducting computers : மீக்கடத்திக் கணினிகள் : அதிகத் திறனுள்ள கணினிகள். சுழற்சி நேரத்தைக் குறைக்க ஜோசப்சன் விளைவையும் மீக் கடத்தும் தன்மையையும் இவற்றின் மின்சுற்றுகள் பயன்படுத்துகின்றன.

super conductor : மீக்கடத்தி : அதிவேக மின்னணு மின்சுற்று.

super disk : மீத்திறன் வட்டு;மிகுதிறன் வட்டு.

Super Drive : மீஇயக்கி : அதன் அதிகபட்ச அடர்த்தி வடிவமைப்பில் 1. 44 மீமிகு எண்மி தகவல்களைச் சேமிக்கும் மெக்கின்டோஷ் நெகிழ் வட்டு இயக்கி. முந்தை மேக் 400 மற்றும் 800 கிலோ எண்மி வட்டுகளையும் அது பிடித்து எழுதும்.

superfloppy : மீநெகிழ் வட்டு : பீ. சி. யின் 3. 5 வட்டு. அது 2. 88 மீமிகு எட்டியலை (MG) வைத்துக்கொள்ளக் கூடியது. 1. 44 மீமிகு எண்மி மற்றும் 720 கிலோ எண்மி வடிவமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எண்மி வரிசையில் அதிகத் திறனுடைய நெகிழ்வட்டு.

superKey : மீ விசை : போர்லாண்ட் நிறுவனத்தின் பீ. சி. விசைப்பலகை பெரு செயலகம் பயன்படுத்துபவர்களின் விசைப்பலகை. மேக் ரோவை உருவாக்கவும், விசைப் பலகையை மறு ஒழுங்குபடுத்தவும் தரவுகளையும், நிரல் தொடர்களையும் இரகசியக் குறிப்பேற்றவும் இது பயனாளர்களை அனுமதிக்கிறது.

super market : பேரங்காடி.

supermini : மீக்குறு : பேரளவு சிறு கணினி, சிறிய பெருமுகக் கணினி களின் திறன் கொண்டவை.

supermini computer : மீக்குறு கணினி : 32 துண்மி சொற்களைப் பயன்படுத்தும் சிறு கணினி. அதிக சொல் நீளத்தின் மூலம் அதிக விளைவும் அதிக துல்லிய கணிப்பு, எளிய நிரல் தொடர் முன்னேற்றமும் ஏற்படும். மீக்குறு கணினியின் செயலாக்கத்திறன் ஒரு பேரளவு பெருமுகக் கணினியின் திறனுக்குச் சமமாக இருக்கும்.

super pipelining : மீத்திறன் இணைச் செயலாக்ககம் : நேரத்தில் நுண்செயலி, ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்ற வழி செய்யும் முறை இணைச் செய