பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bcc

139

BDOS


bcc : பிசிசி :  : பிறர் அறியா கார்பன் நகல் என்று பொருள்படும் (blind carbon copy) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். (bind courtesy copy என்றும் கூறுவர்). மின்னஞ்சலில் ஒரு மடலை பலருக்கும் அனுப்பலாம். பெறுநர் (to) முகவரி இருக்குமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது CC என்ற கட்டத்துள் வேறு பலரின் முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது BCC என்ற கட்டத்துள்ளும் குறிப்பிடலாம். to, cc ஆகியவற்றில் குறிப்பிடும் முகவரிதாரர்களுக்கு இந்த மடல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால், BCC யில் குறிப்பிட்டுள்ள முகவரி தாரருக்கு மடலின் நகல் கிடைக் கும். ஆனால் அந்த மடலின் நகல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது.

. bc. ca : . பி. சி. சிஏ : ஒர் இணையதளம். கனடா நாட்டுப் பிரிட்டிஷ் கொலாம்பியாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

BCD : பிசிடி : Binary coded decimal என்பதன் கருக்கப்பெயர்.

BCNF : பிசிஎன்எஃப் : பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைமுறை கள் உள்ளன. அட்டவணைகள் அந்த வரையறையின்படி அமைய வில்லையெனில் தரவுத் தள மேலாண்மையில் சிக்கல் ஏற்படும். எனவே, அப்படிப்பட்ட அட்டவணைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் நான்கைந்து படிநிலைகளில் மேற்கொள்ளப் பட வேண்டும். பாய்ஸ்-காடின் முறை அதில் ஒரு படிநிலை.

BCs : பிசிஎஸ் : இங்கிலாந்தின் கணினிச் சங்கம் எனப் பொருள்படும் British Computer Society என்ற பெயரின் குறும் பெயர்.

BDOS : பிடிஓஎஸ் : அடிப்படை வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Basic Disk operating System என்பதன் குறும்பெயர். சில இயக்க முறைமைகளில் ஒரு குறிப்பிட்ட வட்டு இயக்கத்துக்கு ஏற்ப சரிப்படுத்தும் அந்த முறைமையின் பகுதி.