பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. sy

1407

symbolic device



யாளர் சேவை பயன்பாடுகளில் தானியங்கி எண்காட்டி போன்ற தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தினால் உள்ளே வரும் அழைப்பு திரும்பப் பெற்று வாடிக்கையாளர் கோப் பின்மூலம் அடுத்துள்ள மனிதப் பிரதிநிதியிடம் செல்லும்.

sy : . எஸ்ஒய் : ஒர் இணைய தள முகவரி சிரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

SYLK file : சில்க் கோப்பு : குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link Fie என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வடிவாக்க அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோப்பு. விரிதாள்களிலுள்ள வடிவமைப்புத் (Formating) தகவல்கள் மற்றும் சில மதிப்புகளுக்கிடையேயான உறவுமுறைகள் பாதுகாக்கப்படுகின்றன.

syllable structure : அசை பிரிப்பி

symbol : குறியீடு; குழுஉக்குறி : 1. எழுத்து, எண் அல்லது அடையாளம். ஒரு எண் இயக்கம் அல்லது உறவைக் குறிப்பிடுவது. 2. கணினியின் எழுத்துத் தொகுதியில் ஏதாவது ஒன்று.

symbol font : குறியீட்டு எழுத்துரு : சிறப்புவகை எழுத்துரு. வழக்கமான எழுத்துகள், நிறுத்தற்குறிகள், எண்களுக்குப் பதிலாக சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும். கணித அறிவியல், மொழியியல் குறியீடுகள், பிறமொழி எழுத்துகள் இருப்பதுண்டு.

symbolic address : குறியீட்டு முகவரி; குழுஉக்குறி முகவரி : குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது.

symbolic coding : அடையாளக் குறியீடமைத்தல் : எந்திரமொழியல்லாத குறியீட்டில் எழுதப்பட்ட நிரல்களை குறியீட்டில் அமைத்தல். இயக்கக் குறியீடுகள் இயக்கிகளுக்காக குறியீட்டு எண்முறையே இதில் பயன்படுத்தப்படுகிறது.

symbolic device : குறியீட்டுச் சாதனம் : உள்ளிட்டு வெளியீட்டுக் கோப்பை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர். சான்று SYSDSK என்பது ஒரு