பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

synthesizer

1412

system 7


 உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கிணைத்து மனிதப் பேச்சினை செயற்கையாக உருவாக்க முடியும்.

synthesizer : தொகுப்பி : ஒலியைத் தானாகவே உருவாக்கவோ அல்லது செயலாக்கவோ செய்யும் வெளியீட்டுச் சாதனத்தை தொகுப்பி என்று சொல்லலாம். சில தொகுப்பிகளில் நுண் செயலகங்கள் இருக்கும். கட்டுப்பாட்டுச் சாதனமாக அவை பயன்படுத்தப்படும். குரல் தொகுப்பிகள் தருகின்ற ஒலி, ஒரு நபர் பேசுவதற்காகவோ, இசைக் கருவிகளைப் போலவோ இருக்கும்.

. sys : . சிஸ் : முறைமை தகவமைவுக் கோப்புகளின் வகைப் பெயர். (extention).

sysadmin : சிஸ்அட்மின் : பெரும்பாலான யூனிக்ஸ் இயக்க முறைமைகளில் முறைமை நிர்வாகியின் புகுபதிகைப் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி.

SYSOP : சிசாப் : system operator என்பதன் குறும்பெயர். ஒரு மின்னணு செய்திப் பலகையை இயக்குபவர்.

sysReq key : சிஸ்ரக் விசை : system request key என்பதன் குறும்பெயர். மையக் கணினியின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் முகப்பு விசைப் பலகையில் உள்ள விசை. பீ. சி. விசைப்பலகைகளில் இந்த விசை உள்ளது. ஆனால், அபூர்வமாகவே பயன்படுத்தப்படுகிறது.

system : அமைப்பு; முறைமை : system என்பதை 'முறைமை' என்று கூறலாம். முறைகருவிகளின் திறன்கள், தொழில் நுட்பங்கள், மாற்றப்படக் கூடிய தகவல், ஒரு குறிப்பிட்ட மேலாண்மை நோக்கங்களை அடைவதில் இயக்கத்தை ஆதரித்தல் போன்றவற்றைக் கொண்டது. தொடர்புடைய வசதிகள், பொருள் சார்ந்த சேவைகள், ஆட்கள், தகவல் ஆகியவற்றைக் கொண்ட, விரும்பப்படும் இயக்கத்தைச் செய்வதற்குத் தேவையான தன்னிறைவுத் தன்மை கொண்டது.

system 7 : சிஸ்டம் 7 : மெக்கின்டோஷ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய மேம்பாட்டு நிலை (1992). இதில் மெய்நிகர் நினைவகம், கூடுதல் நினைவக முகவரியிடல், வெப்ப இணைப்பு கள் (பதிப்பு கூட்டு சேர்), பல்