பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system, audit

1414

system context




தீர்வுகள் காணப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பிறகு, சிறந்த தீர்வு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன் வெற்றி மதிப்பிடப்படுகிறது.

system, audit of computer : கணினி முறைமைத் தணிக்கை.

system, binary number : இரும எண் முறைமை.

system board : அமைப்பு அட்டை : நுண்கணினியின் முதன்மை மின்சுற்றுப் பலகை. தாய்ப்பலகை, பின் தளம் (mother board, back plane) என்றும் அழைக்கப்படும்.

system chart : அமைப்பு வரைபடம் : வரைபடத்தின் வகைகளில் ஒன்று.

system clock : அமைப்பு கடிகாரம் : கணினியில் உள்ள அனைத்து மின்சுற்றுகளையும் இயக்கும் அடிப்படை துடிப்பினை வழங்குகின்ற படிகம். இதில் 8253 நேரம் காட்டும் சிப்புவும் அடக்கம்.

system commands : அமைப்புக் கட்டளைகள்; பொறியமைவு நிரல்கள் : உரையாடல் நேரப்பங்கீட்டு முறையில் இயக்கும் போது தரப்படும் சிறப்பு நிரல்கள். நிரல் தொடர்களை செயல்படுத்தவும் (RUN) அவற்றை வரிசைப்படுத்தவும் (LIST) சேமிக்கவும் (SAVE) மற்றும் இத்தகைய இயக்கங்களைச் செய்யவும் அவை கணினிக்கு நிரலிடுகின்றன.

system component matrix : அமைப்புப் பகுதிகள் அச்சுரு அமைப்பு : வன்பொருள், மென்பொருள், மனிதர்கள், பயன்படுத்தப்படும் வேலைகள் மற்றும் ஒரு தரவு அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் தரவு பொருட்களை ஆவணப்படுத்தும் அச்சுரு அமைப்பு.

system console : முறைமைப் பணியகம் : பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி நிலையம், குறும்பரப்புப் பிணையங்களில் உள்ள முறைமைப் பணியகத்தை ஒத்ததாகும்.

system context : அமைப்பு நிலை : கணினி அமைப்புகள், துணை அமைப்புகள், கணினியின் பாகங்கள் ஆகியவைகளை குறிப்பிட்ட சூழ்நிலையில் கண்டறிந்து 'systemic view' என்றும் கூறப்படும்.