பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


திறனைச் சோதிப்பதற்கான நடைமுறை.

beenet : பீனெட் : ஒரு லேன் (Lan). இதில் தகவல் பரிமாற்ற வேகம் ஒரு நொடிக்கு ஒரு மெகாபைட்.

beep : பீப் : விளி : ஒரு கணினியின் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் ஒசை. கணினி ஒலிபெருக்கிகளில் ஒசையை ஏற்படுத்துவதற்காக சில நிரலாக்க மொழிகளில் உள்ள ஒரு ஆணை.

beep statement : பீப் கூற்று.

beginning-of-file : கோப்பின் தொடக்கம் : 1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்) க்கு முன் பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின் தொடக்கத்தை அறிகிறது. கோப்பின் பிற இடங்களையும் இதன் அடிப்படையிலேயே கணக்கிட்டு அணுகுகிறது. 2. ஒரு வட்டில் எழுதப்பட்டிருக்கும் கோப்பின் தொடக்க இடம். கோப்புகளின் தரவுகளைக் கொண்டிருக்கும் ஒரு கோப்பகம் (Directory) அல்லது திரட்டு இத்தொடக்க இருப்பிடத்தைக் கொண்டிருக்கும்.

beginning of tape marker : நாடா காட்டியின் தொடக்கம் : காந்த நாடாவின் ஒரு புள்ளியைக்காட்டும் அடையாளம். அங்கிருந்துதான் பெரும்பாலும் தரவு தொடங்கும்.

behaviour : நடத்தை : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு பொருள் எவ்வாறு வினையாற்றுகிறது, எதிர் வினையாற்றுகிறது என்பதை அதன் நிலை மாற்றங்கள் மற்றும் செய்தி அனுப்புதலின் மூலம் அறியலாம்.

Bell 103 : பெல் 103 : 300 பாட் வேகம் (Baud) மோடம்களின் தர நிருணயம்.

Bell 212A : பெல் 212ஏ : 12கேபி செய்தி வேக மோடம்களின் தர நிருணயம்.

Bell laboratories : பெல் ஆய்வகங்கள் : ஏ டீ அண்டு டீ நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம். உலகப் புகழ் பெற்றது. பல கணினி வன்பொருள், மென் பொருள் கோட்பாடுகள் மற்றும் கணினி மொழிகள் பெல் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டன.

bell communications Standards : பெல் தகவல் தொடர்பு தர வரையறை : தகவல் பரி மாற்றத்துக்கான பல்வேறு தர வரையறுப்புகளை 1970களின் பின்பகுதியிலும் 1980களின்