பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

table

1424

tabulator clear key


table:பட்டியல்;அட்டவணை:உடனடி பார்வைக்குத் தயாரான வடிவில் தரவுகளைத் தொகுத்தல். தொடர்ச்சியான இருப்பகங்களில் தரவு சேமிக்கப்படுகின்றன. நெடுவரிசை கிடைவரிசை வடிவில் எளிதில் நுழைப் பதற்கேற்ப எழுதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தரவுவைப் பெறக்கூடிய இடத்தைக் கண்டறிய நெடுவரிசை,கிடைவரிசைகளின் கலப்பு உதவுகிறது.

table,addition:கூட்டல் அட்டவணை.

table,datasheet:தரவுத் தாள் அட்டவணை.

table,decision:தீர்வுகாண் அட்டவணை.

table design:அட்டவணை வடிவமைப்பு.

table file:அட்டவணைக் கோப்பு.

table look up:பட்டியல் பார்வை;அட்டவணை நோக்கல்: ஒரு பட்டியலில் தெரிந்த மதிப்புகளைக் கொண்டு தெரியாத மதிப்பைக் கண்டறியும் நடைமுறை.

tablet:வரைவு எண்ணாக்கி:கணினியில் பயன்படுத்துவதற்காக வரைகலைகளையும்,படத்தரவுகளையும் மாற்றித்தரும் உள்ளீட்டுச் சாதனம்.

table view:பட்டியல் பார்வை:வரிசைகள்,பதிவேடுகளையோ அல்லது பலவகைப்பட்ட பொருள்களையோ திரையில் நகர்த்துதல்.

tabular:அட்டவணை வடிவு.

tabular form:அட்டவணை வடிவம்:அச்சிடப்பட்ட வெளியீட்டுக்கு பட்டியல் பார்வை போன்றது.

tabulate:அட்டவணையிடு:1. கூட்டல்களை அச்சிடு. 2.தரவுகளை பட்டியல் வடிவாக்கு.

tabulating Equipment:அட்டவணையிடும் கருவி:துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரங்கள்,விளக்கிகள்,மறு படியெடுப்பிகள்,கணிப்பிகள் மற்றும் பட்டியலிடுவிகள் போன்றவை இதில் அடங்கும்.

tabulator:அட்டவணையாக்கி:மொத்த எண்ணிக்கைகளைக் காட்டி, அச்சிடும்,துளையிட்ட அட்டை கணக்கீட்டு எந்திரம்.

tab setting:தத்தல் அமைப்புகள்.

tabulation:அட்டவணையிடல்;பட்டியலிடல்.

tabulation character:அட்டவணைப்படுத்தும் உரு.

tabulator clear key:தத்தல் நீக்கு; அட்டவணையாக்குத் திறவு.