பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

teletext

1438

template


மூலம் தொலைச் சொற்பகுதி சமிக்கையில் கணினி நிரல் தொடர்களை அனுப்புதல்.

teletext : தொலைவுரை : ஒரு வழி தகவல் தொடர்பு ஊடகம். சில வீடியோ டெக்ஸ்ட் சேவைகளில் பயன்படுத்துவது. ஒரே திரையளவில் சிறப்பு சுருக்கிய அளவில் தொலைக்காட்சித் தகவல்களைத் தொடர்ச்சியாக அனுப்பப் பயன்படுத்துபவர்கள் தங்களது திரையில் எந்தப் படத்தை பார்க்க விரும்புகிறார்களோ அதே படத்தை தங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் மறு குறியீடமைத்துப் பெறலாம்.

teletype interface : தொலைத் தட்டச்சு இடைமுகம்.

teletype mode : தொலைத் தட்டச்சு முறை : தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது போல ஒரு நேரத்தில் ஒரு வரியில் வெளியீட்டை அனுப்புவது. இதன்பொருள் தகவல்கள் காட்டவோ, அச்சிடவோ செய் யும்போது ஒன்றையடுத்து இன்னொரு வரியாக தரவு காட்டப்படும் அல்லது அச்சிடப்படும்.

teietypewriter (TTY) : தொலைத் தட்டச்சுப் பொறி : டீ. டீ. ஒய். தொலைத் தட்டச்சு அலகு.

television receiver (TR) : தொலைக்காட்சி பெறும் பொறி : ஒளிபரப்பப் படும் தொலைக் காட்சி சமிக்கைகளை வானலை வாங்கி மூலம் பெறுகின்ற திறனுடைய வணிக தொலைக் காட்சிப் பெட்டி போன்ற ஒரு காட்சி சாதனம். வானொலி அலைவரிசை குறிப்பேற்றி (மாடுலேட்டர்) கள் இணைத்து காட்சிச் சாதனமாக பல நுண் கணினிகளில் பயன்படுத்தலாம்.

televoting : தொலைநிலை வாக்களிப்பு.

telex : தொலை எழுதி : மேற்கத்திய ஒன்றியத்தினால் அளிக்கப்படும் தந்திச் சேவை.

teller : வங்கிப் பணப் பொறுப்பாளர்.

telmet : தொலை இணைப்பு.

telpak : டெல்பாக் : இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களுக்குப் பொது தகவல் தொடர்புகளை எடுத்துச் செல்வதற்காக அகலப்பாட்டை வழித்தடங் களை வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் நடத்தப்படும் சேவை.

template : படிம அச்சு : 1. வடிவியல் (geometric) ஒட்டு வரை படக் குறியீடுகளை வரையப் பயன்படுத்தப்படும் குழைம (plastic) வழிகாட்டி,

2. கணினி வரைகலையில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடி