பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

benchmark test

143

Bernoulli process




benchmark test : திறன் மதிப்பீட்டுச் சோதனை : முழு செயல் வேகத் திறமையை ஒப்பிடுவதற்காக பல்வேறு கணினிகளில் இயக்கப்படும் ஒரு கணினி நிரல். குறிப்பிட்ட பயன்பாட்டு சூழ்நிலையில் கணினிக் கருவி யின் செயல்திறனை அளக்கப் பயன்படுத்தப்படும் சோதனை.

benign virus : தீங்கிலா நச்சு நிரல் : நச்சுநிரல் போன்ற பண் புடைய ஒரு நிரல் தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்பில் நச்சுநிரலை ஒத்தது. மற்றபடி, அது தொற்றி தீங்கும் விளைவிக்காது.

BeOS : பிஓஎஸ் : பி ஆப்பரேட் டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும் பெயர். பி நிறுவனம் (Be inc) உருவாக்கிய பொருள் நோக் கிலான இயக்க முறைமை பி-கணினி மற்றும் பவர் மெக் கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த இயக்க முறைமை சமச்சீர் பல் செயலாக்கம், பல்பணி மற்றும் பாதுகாக்கப்பட்ட நினைவகம் ஆகிய வசதிகளைக் கொண்டது. பல்லூடகம், அசைவூட்டம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஏற்றது.

Bernoulli box : பெர்னவுலி பெட்டி : சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ் வட்டகம், அதிகமான சேமிப்புத் திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல் பெர்னவுலி (daniel bernoulli) என்ற இயற்பியல் அறிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றியக்கத்தில் செயல் படும் இயங்கேணி (Lift) பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் செயல்படுத்திக் காட்டியவர். பெர்னவுலிப் பெட்டி, மிகுவேகத்துடன் சுழலும் நெகிழ் வட்டை வட்டின் எழுது/படிப்பு முனைக்கு அருகில் கொண்டு வரும்.

Bernoulii Box drive : வட்டு இயக்ககம்.

Bernoulli cartridges : பெர்னவுலி பேழைகள் : நிலைவட்டு மற்றும் நெகிழ் வட்டு கலந்த ஒரு சேமிப்பகச் சாதனம்.

Bernoulli process : பெர்னவுலி செயலாக்கம் : பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை

மட்டுமே கொண்ட ஒரு பரிசோதனையை திரும்பத் திரும்பச் செய்வதால் ஏற்படக்கூடிய முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தல்.