பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

testing room

1443

text based


சோதனை செய்தல். இதில் தவறான நடத்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் கண்டறியும் முயற்சியில், செல்லுகின்ற மற்றும் செல்லாத தகவல்களும் இதில் சேர்க்கப்படும்.

testing room;ஆய்வு அறை.

test message : சோதனைச் செய்தி.

test plan : சோதனைத் திட்டம் : எத்தகைய சோதனை நடத்தப்படும் என்பதைப் பொதுவாகக் குறிப்பிடுவது. இதில் சகிக்கப்படும் அளவுகளின் வரையறையும் உள்ளடங்கி இருக்கிறது.

test post : சோதனை அஞ்சல் : செய்தி எதுவுமில்லாத ஒரு செய்திக்குழுக் கட்டுரை. இணைப்பைச் சரி பார்க்க அனுப்பி வைக்கப்படுவது.

test programme : சோதனை செயல் முறை;சோதனை நிரல்.

test run : சோதனையோட்டம் : ஒரு நிரல் தொடர் சரியாக இயக்கப்படுகிறதா என்பதை சோதிப்பதற்கான ஒட்டம். சோதனை ஒட்டத்தின்போது, வெளியாகும் முடிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிடப்படும்.

TeX or TEX : டெக்ஸ் : கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்டு க்னத் (Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள். ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல், கணித மற்றும் பிற தொழில் நுட்ப ஆவணங்களை உருவாக்க முடியும். யூனிக்ஸ், எம்எஸ் டாஸ், விண்டோஸ், ஆப்பிள் மேக் முறைமைகளுக்கான டெக்ஸ் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது (ftp : //ftp. tex. ac. uk/tex-archiev/). சில கூடுதல் வசதிகளுடன் விற்பனைக்கும் கிடைக்கிறது. ${\pi}r^2$ என உள்ளீடு செய்தால் πr2 என்கிற வெளியீடு கிடைக்கும். டெக்ஸை குறுமங்கள் (macros) மூலம் விரி வாக்க முடியும். பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கென குறுங்கோப்புகள் கிடைக்கின்றன.

text : உரை : சொல்லப்பட வேண்டிய தகவலை விளக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் சொற்கள், கோடுகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டது. வரைகலை (Graphics) க்கு எதிர்ச் சொல்.

text attribute : உரைப்பான்மை.

text area : உரைப்பகுதி.

text based : உரை சார்ந்த : எழுத்து சார்ந்த என்றும்