பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

text body

1444

text management


சொல்லலாம். சொற்களையே மிகுதியாகக் கொண்ட,சில வரைகலை எழுத்துகளையும் கொண்ட திரைக்காட்சி. சான்றாக,80 பத்திகளின் 25 வரிசைகள்.

text body:உரை உடற்பகுதி.

text box:உரைப்பெட்டி:ஒரு வசனப் பெட்டியில் கட்டளையைச் செய்வதற்கு வேண்டிய தரவவைத் தட்டச்சு செய்யலாம். சொல் பெட்டி காலியாக இருக்கலாம் அல்லது வசனப் பெட்டி திறக்கும்போது சொற் களைக் கொண்டிருக்கலாம்.

text colour:உரை நிறம்.

text compression:உரை ஒடுக்கம்.

text control:உரைக் கட்டுப்பாடு.

text curson:உரைச் சுட்டி.

text data:உரை தரவு:ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொல் தொடர்கள்,வாக்கியங்கள்,பத்திகள் மற்றும் பிற தரவு தொடர்ப் படிவங்கள்.

text editing:உரை பதிப்பு:மின்னணு முறையில் சேமிக்கப்பட்ட பொருளைச் சேர்த்தல்,மாற்றல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச்சொல்.

text editor:உரைத்தொகுப்பி;ஏடு திருத்தி;நூல் திருத்தி;நூல் செப்பமாக்கி;சொல் தொகுப்பி;சொல் பதிப்பி.

text entry:உரைப்பதிவு:உரை உள்ளீடு விசைப்பலகை மூலம் உரைக்கான எழுத்துகளை உள்ளிடல்.

text field:உரைப்புலம்:எண்ணெழுத்து தரவுகளான பெயர் மற்றும் முகவரிகளைத் தாங்குகின்ற தரவுக் கட்டுமான அமைப்பு உரைப்புலத்தில் அதிகமான அல்லது எல்லையற்ற சொற்பகுதி தங்கியிருக்குமானால்,அது குறிப்புப் பகுதி என்று அழைக்கப்படலாம்.

text file:உரைக்கோப்பு:சொல்வடிவில் கூறப்பட்ட தரவலைக் கொண்டுள்ள கோப்பு.

text formating programme:உரைப் படிவ நிகழ்வு.

textile design:நெசவுத்துணி உருவரை.

text lables:உரைச் சிட்டைகள்.

text line:உரை வரி.

text lock:உரைப் பூட்டு.

text management:உரைப்பகுதி மேலாண்மை:உரைப்பகுதியை உருவாக்கி,சேமித்து,திரும்பப் பெறல். பலதரப்பட்ட அடிப்படையில் உரைப் பகுதிகளைத் தேடக்கூடிய,தேடிக்கொண்டு வரும் திறன்கள் என்பதை இது