பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thermal wax-transfer printer

1448

the world-public


துக்கு மாற்றும் அச்சிடும்முறை, சான்றாக;வண்ண அச்சுப்பொறியில் பலநூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மை கொண்ட மைலார் நாடா பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிறத்திற்கு எதிராகவும் ஒரு காகிதத்துளை அழுத்தி சூடாக்கும் பொருள்களைக் கொண்ட ஒரு கோட்டின் வழியாகச் செல்லும்போது புள்ளிகள் அல்லது படப்புள்ளி களின் மை காகிதத்தில் மாற்றப்படுகிறது.

thermal wax-transfer printer : வெப்ப மெழுகு-மாற்றல் அச்சுப் பொறிஒரு சிறப்புவகை தொடா அச்சுப்பொறி (Nonimpact printer). வெப்பத்தின் மூலம் வண்ண மெழுகினை தாளின்மீது உருகவைத்து படி மங்கள் வரையப்படுகின்றன. வழக்கமான வெப்ப அச்சுப் பொறியைப் போலவே, சூடாக்குவதற்கு ஊசி (பின்) கள் பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ண மெழுகு பூசப்பட்ட நாடாமீது சூடான ஊசிகள் படும்போது ஊசிகளுக்கு அடியிலுள்ள மெழுகு உருகித் தாளில் ஒட்டிக் கொள்கின்றன. ஊசிகள் தாளைத் தொடு வதில்லை.

thesaurus : அகராதி;அகர முதலி : பெரும்பாலான சொல் அகராதிகளில் உள்ள ஒரு தன்மை ஒரு குறிப்பிட்ட அனேகமாக அதிகம் பயன்படுத்தப் பட்ட சொல்லுக்கு மாற்றாக ஒரு சொல்லை கண்டுபிடிக்க உதவுகிறது. எந்த வகையான எழுத்துப் படைப்பை உருவாக்கினாலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மாற்றுச் சொற்கள் அல்லது மரபுத் தொடர்களை அது தருகிறது என்பதால் அகராதி என்பது மதிப்புமிக்க குறிப்புதவிப் பொருளாகும்.

the world-public access UNIX : உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ் : பாஸ்டனை மையமாகக் கொண்ட மிகப்பழைய பொது அணுகு இணையச் சேவை வழங்கன். 1990 ஆண்டிலிருந்து இவ்வமைப்பு, தொலைபேசி மூலம் இணையத்தை அணுகும் வசதியைத் தந்தது. அதாவது பொதுமக்கள் இணையத்தை அணுக முடியும். வைய விரிவலை அணுகல், யூஸ்நெட், ஸ்லிப்/பீபீபீ டெல்நெட், எஃப்டீபீ, ஐஆர்சி, கோஃபர், மின்அஞ்சல் போன்ற பிற வசதிகளையும் வழங்குகிறது. 1995 ஆம் ஆண்டிலிருந்து யுயுநெட் மூலமாக உள்ளூர்