பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thirty-two-bit chip

1451

threading


thirty-two-bit chip : முப்பத்திரண்டு துண்மிச் சிப்பு : ஒரே நேரத்தில் முப்பத்திரண்டு துண்மிகளைச் செயலாக்கம் செய்யும் மையச் செயலக சிப்பு.

Thomas Charles Xavier (Colmar, Thomas) : தாமஸ் சார்லஸ் சேவியர் (கால்மார், தாமஸ் : 1820 இல் உருவாக்கப்பட்ட கணக்கிடும் எந்திரம். நடைமுறை சாத்தியமான, பயனுள்ள வகையில் செயலாற்றிய முதல் கணிப்பி என்று இதைப்பற்றி கூறப்படுகிறது.

thrashing : அடித்தல்;புடைத்தல்;தாக்குதல் : மெய்நிகர் நினைவக அமைப்பில் நினைவக ஏற்றலுடன் தொடர்புள்ள மேற்பகுதி"கடைதல்' (churning) என்றும் அழைக்கப்படுகிறது.

thread : புரி.

threaded : முறுக்கப்பட்ட : பல தனிப்பட்ட துணைநிரல் தொடர்களை அழைப்பதற்கேற்ற வசதியுள்ள ஒரு நிரல் தொடர்.

threaded discussion : கோத்த உரையாடல்;தொடரும் விவாதம் : ஒரு செய்திக்குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில், ஒவ்வொரு செய்தி அல்லது கட்டுரைக்கான பதில்கள், எதிர்ப் பதில்கள் அனைத்தையும் தனித்தனியே அகர வரிசைப்படியோ, கால வரிசைப்படியோ தொகுக்காமல் மூலச் செய்தியோடு தொடர்ச்சியாகப் பின்னுவது.

threaded newsreader : கோத்த செய்தி படிப்பி : செய்திக் குழுக்களின் செய்திகள்/அஞ்சல்கள்/பதில்களை ஒன்றன்கீழ் ஒன்றாய் ஒரே செய்திபோலக் காட்டும் செய்திப்படிப்பு நிரல். பதில்கள் தனித்தனியே அகர வரிசை/கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்காது.

threaded tree : தொடுப்புறு மர அமைப்பு : மரமொத்த தகவல் அமைப்பை 'ஸ்கேன்'செய்வதற்கு உதவும் கூடுதல் சுட்டுகளைக் கொண்ட மர அமைப்பு.

threading : புரியாக்கம் : நிரலின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் நுட்பம். (எ-டு) ஃபோர்த் (Forth), ஜாவா சி# போன்ற மொழிகளில் புரியாக்க நுட்பம் உள்ளது. ஃபோர்த் மொழியில், ஒவ்வொரு புரியாக்கப்பட்ட துணை நிரல் கூறுகளிலும் காணப்படும் பிற துணைநிரல் கூறுகளுக்கான அழைப்புகள் (ஃபோர்த் மொழி யில் முன் வரையறுத்த ஒரு சொல்) அந்த நிரல்கூறுகளுக்கான சுட்டுகளால் (pointers) பதிலீடு செய்யப்படுகின்றன.