பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

threat

1452

throttle control


threat : அச்சுறுத்தல்;மருட்டல்.

threat agent : அச்சுறுத்தி.

three address computer : மூன்று முகவரி கணினி;மும் முகவரி கணினி : அதன் நிரலிடல் முறையில் மூன்று முகவரிகளைப் பயன்படுத்தும் கணினி, சான்றாக, ADD A, B, C என்ற நிரல்களில் A மற்றும் சார்ந்துள்ள மதிப்புகள் காட்டப்பட்டு C உடன் அதன் முடிவு சேர்க்கப்படுகிறது.

three address code : மும் முகவரிக் குறியீடு.

threat analysis : அச்சுறுத்தல் பகுப்பாய்வு.

three dimentional (3-D) : முப்பரிமாண (3-D) மூவளவு : கணினி வரைகலையில், ஒரு மாதிரியின் உயரம், அகலம் மற்றும் ஆழத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் மூவிடப் பரிமாணங்கள் சேமிக்கப்படுகின்றன.

three dimentional array : முப் பரிமாண வரிசை : மூன்று மடிப்பு வகைகளை வரிசை, பத்தி, மடிப்பு-வழங்கும் வரிசை

three point curve : முப்புள்ளி வளைவு.

three state logic element : மூன்று நிலை தருக்கப்பொருள் : மூன்று வெளியீட்டு நிலைகளை-நிறுத்தம், குறைந்த மின்சக்தி மற்றும் அதிக மின்சக்தி- தருகின்ற மின்னணு பொருள்.

three-tier client/server : மூன்றடுக்கு கிளையன்|வழங்கன் : மென் பொருள் அமைப்புகள் மூன்றடுக்குகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கிளை யன்/வழங்கன் கட்டுமானம். (1) பயனாளர் இடைமுக அடுக்கு. (2) வணிகத் தருக்க அடுக்கு. (3) தரவுத் தள அடுக்கு. ஒவ்வோர் அடுக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்புகளைக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, மேல் அடுக்கில் ஒன்று அல்லது பல பயனாளர் இடைமுகங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பயனாளர் இடைமுகமும் நடு அடுக்கிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளுடன் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். நடு அடுக்கிலுள்ள பயன்பாடு ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தரவுத் தளங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

throttle control : தடுப்பிதழ்க் கட்டுப்பாடு : கணினியில் விமானப் பாவிப்பி அல்லது விளையாட்டுகளில், பாவிப்பு எந்திரப் பொறியின் சக்தியைக் கட்டுப்படுத்தப் பயனாளருக்கு