பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

throughput

1453

tick


உதவும் ஒரு சாதனம். தடுக்கிதழ், பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (JoyStick) அல்லது ஒரு சுக்கான் (Rudder) விசையுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.

throughput : முழுதும் செல்லல் : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கணினி அமைப்பு செய்யக் கூடிய பயனுள்ள செயலாக்கத்தின் மொத்த அமைப்பான அளவு.

throw : எறி : சி ++/ஜாவா/சி# மொழிகளிலுள்ள ஒரு கட்டளை.

thumbnail : விரல்நுனி;விரல் நகம், குறுஞ்சின்னம் : ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகுவிரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லது குறுஞ்சின்னங்களைப் பெற்றிருப்பதுண்டு. இணைய உலாவி, முழு அளவுப் படிமத்தைவிட இக் குறுஞ்சின்னங்களை வெகு விரைவாகப் பதிவிறக்கம் செய்துவிடும். இக்குறுஞ் சின்னங்களை சுட்டியால் சொடுக்கியதும் முழுப் படம் திரையில் விரியும்.

thumb wheel : கட்டைவிரல் சக்கரம் : உள்ளிட்டுச் சுட்டியை நிலைக்க வைக்கும் சாதனம். ஒரு அச்சில் சுட்டியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சுழலும் சக்கரத்தைக் கொண்டது. விரல் சக்கரங்கள் இரட்டையாகவே இருக்கும். ஒன்று சுட்டியின் செங்குத்து இயக்கத்தையும், மற்றொன்று பக்கவாட்டு இயக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

thyristor : தைரிஸ்டர் : மூன்று அல்லது மேற்பட்ட இணைப்புகளைக் கொண்ட இருநிலைச் சாதனம.

TIA : டீஐஏ : முன்கூட்டிய நன்றி என்று பொருள்படும் Thanks in Advance என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில், ஒரு கோரிக் கையை முன்வைக்கும்போது, வழக்கமாகச் சொல்லப்படுவது.

TICCIT : டிக்கிட் : Time shared interactive computer controlled instructional television என்பதன் குறும்பெயர். சிறு கணினிகளையும் மாற்றம் செய்யப்பட்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளையும் ஒரே நேரத்தில் பல மாணவர்களுக்கு தனிப்பட்டமுறையில் சொல்லித் தரு வதற்குப் பயன்படுத்தும் கணினி உதவிடும் கல்வி அமைப்பு.

tick : டிக் : 1. ஒரு கடிகாரத் துடிப்பு மின்சுற்றிலிருந்து