பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1456

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

TIGA

1455

tiling


TIGA : டிகா : டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வரைகலைக் கட்டுமானம் என்று பொருள்படும் Texas Instruments Graphics Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் 340x0 வரைகலைச் செயலியின் அடிப்படையில் அமைந்த, ஒளிக்காட்சி தகவிக் கட்டுமானமாகும் இது.

tightly coupled : இறுக்கமாக இணைக்கப்பட்ட : ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் கணினிகளைப் பற்றியது.

tightly coupled multi processing : இறுக்க இணைவு பன்மைச் செயலாக்கம்.

tilde : டில்டே : அஸ்கி எழுத்து எண் 126 (-) சில பெரிய நிரல் தொடர் மொழிகளில் பயன்படுத்தப்படுவது. சான்றாக, லோட்டஸ் 1-2-3 ஒரு வரி திரும்ப வருவதைக் குறிப்பது.

tile : காட்சி வில்லை : வரை கலை ஓவியப்பொருளின் ஒரு பகுதி. சதுரம் அல்லது வைர வடிவமாக இருக்கலாம்.


காட்சி வில்லை


tiled : அடுக்கப்பட்ட : பொருள்களை அடுத்தடுத்துக் காட்டுதல். சான்றாக, அடுக்கப்பட்ட சாளரங்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கமுடியாது.

tile vertically : செங்குத்தாய் அடுக்கு.

tiling : உழுதல் : வரைகலை காட்சிப்பகுதியில் ஒரு இடத்தின் தனி நிறத்தைக் கொண்டு நிரப்பாமல் ஒரு அமைப்பைக் கொண்டு நிரப்புதல். சாளரங்களை வரிசைப்படுத்தும் முறை. இதில் சாளரங்கள் ஒன்றின் மீது ஒன்று மேலேறி நிற்காமல் அனைத்துச் சாளரங்களும் தெரியும். ஒவ்வொரு சாளரமும் திரையில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறது.