பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. tm

1460

token bus network


இணையத்தில் மின்னஞ்சல், செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் கணினிக் கலைச்சொற்களில் இருக்கும் ஏராளமான சுருக்கச் சொற்கள், குறிப்பாக மூன்றெழுத்துச் சுருக்கச் சொற்கள் குறித்து அங்கதமாய்க் குறிப்பிடப்படும் சொல்.

. tm : . டீஎம் : ஒர் இணைய தள முகவரி துர்க்மேனிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர்.

. tn : . டீஎன் : ஒர் இணைய தள முகவரி துனிசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. to : . டீஓ : ஒர் இணைய தள முகவரி டோங்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

toggle : இருநிலை மாற்றி : இரண்டு நிலையான அமைப்புகளைக் கொண்ட ஒரு சாதனம்.

toggle case : இருநிலைமாற்றிப் பெட்டி, நிலைமாற்றிப் பெட்டி.

toggle keys : நிலைமாறு விசைகள் : விண்டோஸ் 95/98 இல் உள்ள ஒரு பண்புக்கூறு. கேப்ஸ்லாக், நம்லாக், ஸ்குரோல்லாக் போன்ற நிலை மாற்று விசைகளில் ஒன்றை நிகழ் (ON) அல்லது அகல் (OFF நிலையில் வைக்கும் போது மெல்லிய/உரத்த பீப் ஒலி எழும்.

toggle switch : இருநிலை மாற்றி.

token : அடையாள வில்லை;அடையாளி;வில்லை : 1. ஒரு நிரல் தொடரமைப்பு மொழியில் உள்ள ஒரு பெயர் அல்லது பொருளைக் குறிப்பிடுகின்ற குறியீடு. 2. ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இணைய சமிக்கை மூலம் குறிப்பிட சில வழித் தடங்களில் பயன்படுத்தப்படுவது. எட்டு 1-கள் போன்ற துண்மிகளின் தொகுதி.

token bus network : வில்லைப் பாட்டைப் பிணையம் : தரவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற, பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை, பகிர்வு தரவு நெடுவழியில் பிணைக்கப் பட்டிருக்கும்). தரவு அனுப்பும் உரிமையை வழங்கும் வில்லை ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு நிலையமும்