பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

token passing

1461

toner


வில்லையைச் சிறிது நேரம் வைத்திருக்கும். அந்நேரத்தில் அந்நிலையம் மட்டுமே தரவு அனுப்ப முடியும். அதிக முன்னுரிமை பெற்ற நிலையத் திலிருந்து அதற்கடுத்த முன்னுரிமை பெற்ற நிலையத்துக்கு வில்லை அனுப்பி வைக்கப்படும். அந்நிலையம், பாட்டையில் அடுத்த நிலையமாக இருக்கவேண்டியதில்லை. சுருங்கக்கூறின், வில்லையானது பிணையத்தில் ஒரு தருக்க நிலை வளையத்தில் (Logical Ring) சுற்றிவருகிறது எனலாம். வளையக் கட்டமைப்பில் இருப்பதுபோன்று பருநிலை வளையத்தில் (Physical Ring) சுற்றி வருவதில்லை. இத்தகு பிணையங்கள் ஐஇஇஇ 802. 4-ல் வரையறுக்கப்பட்டுள்ளன.

token passing : அடையாள வில்லை அனுப்புதல் : ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர் பிடித்துக் கொள்வதைத் தடுக்கும் ஒரு தொழில் நுட்பம். தகவல் தொடர்பு அமைப்பில் ஒரே ஒருமுறை மட்டும் வருமாறு குறியீடு இடப்பட்ட அடையாள வில்லை. ரேமில் உள்ள அடையாள வில்லையை வைத்திருக்கும் ஒரே ஒரு கணினி மட்டுமே தகவல்களை அனுப்பிப் பெறமுடியும். இரயில்வே சமிக்கை முறை யிலிருந்து அடையாள வில்லையை அனுப்பிப் பெறும் முறை பெறப்பட்டது. இரண்டு இரயில்கள் ஒரே பாதையில் வந்து மோதிக்கொள்வதை தடுப்பதற்காக அடையாளவில்லை அல்லது பேட்டனை முன்னும், பின்னும் எடுத்துச் செல்வார்கள்.

token ring : அடையாளவில்லை வளையம் : 1980 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎம் கணினி கட்டமைப்பு வரை முறைகளின் உரிமப்பொருள். IEEE 802. 5 தர நிருணயத்தில் இது வரையறுக்கப்படுகிறது.

token ring network : அடையாளவில்லை வளைய பிணையம் : வரிசைமுறையில் அடையாள வில்லையை அனுப்பும் நுட்பத்தைப் பயன்படுத்தும் தகவல் தொடர்புப் பிணையம். இதில் பிணையத்தின் ஒவ்வொரு நிலையமும் அடையாள வில்லையை அதற்கடுத்த நிலையத் திற்கு அனுப்பும்.

tolerance : இணக்கம்;பொறுதி.

toll : சுங்கம்.

tone : நிறத்திண்மை : கணினி வரை கலையில் மென்னிறம் மற்றும் நிழல்.

toner : மை : நகலெடுக்கும் எந்திரங்களிலும், லேசர் அச்சுப்