பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. bh

146

bi-endian


என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

. bh , பிஹெச் : ஒர் இணைய தளம் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

bias : மதிப்புகளின் தொகுதியின் சராசரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மதிப்பு விலகிச்செல்லும் அளவு.

bibliography : நூல் விவரத் தொகுதி : 1. ஆவணங்களின் விவரங்களைக் கூறும் பட்டி, 2. விவர நூல் பட்டியல். 3. ஒரு தலைப்பு அல்லது ஆசிரியர் தொடர் பான ஆவணங்களின் பட்டியல். 4. பட்டி அல்லது பட்டியலைத் தொகுக்கும் செயல் முறை.

bidirectional : இரு திசையில் : ஒரு கம்பியில் தரவு இரு திசை களிலும் போகலாம். இரண்டு திசையிலும் ஒவ்வொரு செலுத்தி/வாங்கி (Transceivers) களும் வாங்கி வெளியிடும். பொதுவாக இரு திசை இணைப் புத் தொகுதிகள் மின்பாட்டை நிலையிலோ அல்லது திறந்த கலெக்டர், டிரான்சிஸ்டர் டிரான்சிஸ்டர் தருக்க முறையில் அமைந்திருக்கும் அளவைகளாகவோ இருக்கும்.

bidirectional bus : இருதிசை மின்பாட்டை : ஒரே மின் இணைப்புப் பாதையில் இரு திசைகளிலும் தரவு மாறப்படுதல்.

bidirectional parallel port : இருதிசை இணை வாசல்; இரு திசை இணை நிலைத் துறை : கணினிக்கும் இன்னொரு புறச் சாதனத்துக்கும் இடையே இரு திசையிலும் இணை நிலைத் தகவல் தொடர்புக்கு வழியமைத் துத் தரும் ஒர் இடை முகம்.

bidirectional printer : இரு திசை அச்சுப் பொறி : அச்சிடும் தலை திரும்பி வருவதன் தாம தத்தைத் தவிர்க்க இடப்புறத் திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத்திலிருந்து இடப்புறமாகவும அச்சிடும் அச்சுப்பொறி.

bi-endian : இரு முடிவன் : இரு முனையன் : சிறு முடிவன், பெரு முனையன் (காண்க Little Endian and Big Endian), ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண் செயலி அல்லது வேறெந்த சிப்புகளின் பண்புக் கூறு. பவர்பிசி (powerPC) துண்செயலி இத் தகைய இரு முடிவன் திறனைக் கொண்டுள்ளது. சிறுமுடிவன் விண்டோஸ் என்டி, பெரு முடிவன் மேக் ஒஎஸ்/ பீபீஜி ஆகிய இரு இயக்க முறைமைகளும் இயங்க அனுமதிக்கிறது.