பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trademark

1469

train1


டிராக்டர் ஏற்புப் பகுதியில் உள்ள துளைகள் காகிதத்தை வாங்கி நகர்த்துகிறது.

trademark : வணிகச் சின்னம் : ஒரு நிறுவனம் தானே தயாரிக்கும் தனியுரிமை விற்பனைப் பொருட்களை அடையாளங் காட்டும் ஒரு சொல், சொல் தொடர், குறியீடு, அல்லது ஒரு படிமம் (அல்லது இவற்றுள் சில வற்றின் சேர்க்கை). பெரும்பாலும் வணிகச் சின்னத்தின் அருகில் TM அல்லது R என்ற குறியீடு இருக்கும்.

trade off : ஈடுகட்டல்.

trade show : வணிகக் கண்காட்சி;விற்பனைப் பொருட்காட்சி : பல்வேறு விற்பனை நிறுவனங்கள் சேர்ந்து தங்களுடைய விற்பனைப் பொருட்களை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தல்.

traffic : போக்குவரத்து : ஒரு தகவல் தொடர்பு இணைப்பு அல்லது தடத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள்.

traffic intensity : போக்குவரத்து அடர்வு.

traid : டிரைட் : மூன்று துண்மிகள், எட்டியல்கள் அல்லது எழுத்துகள் போன்று மூன்றினைக்கொண்ட தொகுதி.

trail : செல் தடம்.

trailer : முன்னோட்டம் : 1. தரவு செயலாக்கத்தில், ஒரு கோப்பின் கடைசிப் பதிவேடு. அப்பதிவேட்டின் கோப்பில் உள்ள பதிவேடுகளின் எண்ணிக்கையையும் இடைநிலை கூட்டல்களையும் கொண்டிருக்கும். 2. தரவு தொடர்புகளில், ஒரு குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுதி. அனுப்பப்பட்ட செய்தியின் கடைசிப்பகுதி இதில் இருக்கும்.

trailer edge : முன்னோட்ட விளிம்பு.

trailer label : முன்னோட்ட வில்லை : ஒரு கோப்பைப் பற்றிய அடையாளத் தகவலைக் கொண்டிருக்கும் அதற்கு முந்தைய கோப்பின் கடைசிப் பதிவேடு.

trailer record : முன்னோட்ட ஏடு.

trailing edge : பின்விளிம்பு : ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி. ஒர் இலக்கமுறை சமிக்கை நிகழ்நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலை மாற்றத்தைக் குறிக்கிறது.

train1 : தொடர், வரிசை : தொடர் வரிசையாய் அமைந்திருக்கும் உருப்படிகள் அல்லது