பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transfer, serial

1472

transient programme


தரவு ஒரு சாதனத்திலிருந்து வேறு ஒன்றுக்கு எந்த வேகத்தில் நகர்த்தப்படுகிறது என்பது.

transfer, serial : தொடர் மாற்றல்.

transfer statement : இடமாற்றுக் கூற்று;மாற்றல் கூற்று : ஒரு நிரலாக்க மொழியில், நிரலின் ஒட்டத்தில், கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை. பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

transfer time : பரிமாற்ற நேரம் : தரவு பரிமாற்றத்தில் தரவு பரிமாற்றம் தொடங்கிய நேரத்துக்கும் முடிந்த நேரத்துக்கும் இடைப்பட்ட நேரம்.

transfer, total : முழு மாற்றல்.

transform : உருமாற்று : அதன் பொருளை மாற்றாமல் தரவின் வடிவத்தை மாற்றுதல்.

transform algorithm : மாற்றல் நெறிமுறை : ஒரு பதிவு விசையில் எண் மதிப்பீடுகளைச் செய்து அதன் முடிவை அந்தப் பதிவேட்டின் முகவரியாகப் பயன்படுத்துவது.

transformation : உருமாற்றம் : கணினி வரைகலையில், ஒரு திரை உருவத்தின் அளவு அல்லது இடத்தின் மீது செய்யப்பட்ட மாற்றல்களில் ஒன்று. மூன்று அடிப்படை மாறுதல்களாக மொழி பெயர்ப்பு, அளவிடல் மற்றும் சுழற்சி ஆகியவற்றைக் கூறலாம்.

transformer : மின்மாற்றி;உருமாற்றி : கணினி மின்வழங்கலில் 115 வோல்ட்டுகள், 60 ஹெட்சுகள் அதைவிடக் குறைந்த ஆனால் கணினி கருவி பயன் படுத்தக்கூடிய பொருத்தமான மின்னழுத்தமாக மாற்றித் தருதல்.

transient : மாறுகின்ற;நிலையிலா, மாறுகுணம் : 1. மாற்றத்துக்குப் பிறகு சிறிது நேரம் அப்படியே இருக்கின்ற நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் பற்றி ஆராய்வது. 2. மின்சக்தி அல்லது சமிக்கையில் திடீரென்று எழுச்சி ஏற்பட்டு அதனால் தவறான சமிக்கையும், பாகங்கள் கோளாறுகளும் ஏற்படுதல்.

transient error : மாறும்பிழை : ஏதாவது ஒருமுறை மட்டுமே ஏற்படுவது போன்றபிழை. அது மீண்டும் திரும்ப ஏற்படாது.

transient portion : தற்காலிகப் பகுதி, மாறும் பகுதி.

transient programme : மாறும் நிரல் தொடர்;மாறுநிலை