பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transpose

1476

Trash


ஏற்படுத்துவதற்கும் எல்லா தரவுகளும் பாதுகாப்பாக சென்று சேர்ந்து விட்டனவா என்று பார்ப்பதற்குமான தரவு தொடர்பு விதிமுறை. ஓஎஸ்ஐ மாதிரியின் 4-வது பகுதியில் இது வரையறுக்கப்பட்டுள்ளது.

transpose : இடைமாற்றம் : தரவுகளின் இரு பொருள்களை ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளுதல்

transpose error : இடமாற்றப்பிழை.

transputer : ட்ரான்ஸ்பியூட்டர்;சில் கணினி : மின்மப்பெருக்கி (Transistor), கணினி (Computer) ஆகிய இருசொற்களின் கூட்டுச்சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக்கணினி. ரேம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு. இணைநிலைக் கணிப்பணி அமைப்புகளுக்கு அடிப்படையான கட்டுமான உறுப்பாகும்.

transreciver : பெற்றனுப்புச் சாதனம்;பெற்றனுப்பி.

transversal : ஊடு வெட்டுக்கோடு : ஒரு நிரல் தொடரில் பிழை நீக்குவதற்காக ஒவ்வொரு சொற்றொடரையும் செயல்படுத்துதல்.

trap : பொறி : தெரிந்த இடத்திற்கு நிரல் தொடரின் நிபந்தனையுடன் கூடிய தூண்டுதல். நிரல் தொடர் இயக்கப்படும் போது பொறி வைக்கப் பட்டுள்ள இடத்திற்குப் போனவுடன் இது தானாகவே செயல்படுத்தப்படும்.

trapdoor : பொறிக்கதவு : தரவுவைப் பின்னர் பெறலாம் மாற்றலாம் அல்லது அழிக்கலாம் என்ற நோக்கத்தில் ஒரு தரவு செயலாக்க அமைப்பில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் பிரிவு.

trapping : பொறிவைத்தல் : ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றும் வழக்கமான நிரல் தொடர் ஓட்டத்தில் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளும் வன்பொருள் வசதி.

Trash : குப்பைத் தொட்டி, குப்பைக் கூடை : மெக்கின் டோஷ் ஃபைண்டர் பயன்பாட்டில் குப்பைத் தொட்டிபோல் தோற்றமளிக்கும் ஒரு சின்னம். ஒரு கோப்பினை அழிக்க விரும்பும் பயனாளர் அக்கோப்புக்குரிய சின்னத்தை இழுத்துவந்து குப்பைத் தொட்டியில்விட வேண்டும். குப்பைத் தொட்டியில் இடப்பட்ட கோப்பு உண்மையில் அழிக்கப்படாது. தேவையானபோது மீட்டுக் கொள்ளலாம். குப்பைத் தொட்டிமீது இரட்டைச்