பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tree sort

1478

trigonometry


tree sort : மர வகைப்படுத்தல் : ஒரு மரத்தின் முனைகளாகக் கருதப்படுபவற்றை மாற்றக்கூடிய வகைப்படுத்தும் முறை. ஒருபொருள் வேர்முனையை அடைந்தவுடன், கடைசி இலை முனையுடன் அது பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றது.

tree structure : மர அமைப்பு : தரவுகளை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர்.

trellis-coded modulation : பின்னல்-குறிமுறைப் பண்பேற்றம் : 900தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம். வினாடிக்கு 9600 துண்மி (பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன் படுத்தப்படுகிறது. சுமப்பி அலையின் பாகை, வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு, தகவலானது தனித்த துண்மி (பிட்டு) தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது. பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன் சேர்க்கப்படுகின்றன.

trend line : போககுக்கோடு : தெரிந்த தகவலுக்கு அப்பால் போக்குகளைக் கண்டறிந்து உரைப்பதற்காக தரவு வரிசைகளைக் கணித்து விரிவாக்கல்.

triad : மும்மை.

trial version : வெள்ளோட்டப் பதிப்பு;முன்னோட்டப் பதிப்பு.

tribble click : முச் சொடுக்கி.

trichromatic : மூவண்ணத் திறமான : மூவண்ணக் கலவை : கணினி வரைகலையில், மூவண்ணக் கலவை என்பது பொதுவாக மூன்று அடிப்படை நிறங்கள் (சிவப்பு, பச்சை மற்றும் நீலம்) ஒன்றாகச் சேர்ந்து மற்ற நிறங்களை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறது.

trigger : விசை வில் : ஒரு இயக்கப்பிடியின் மேலுள்ள பொத்தான். ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காக ஏவுகணையைச் சுருக்கி அல்லது ஒரு சங்கடத்தைத் துண்டுதல் போன்றவற்றைச் செய்ய ஒளிக்காட்சி விளையாட் டுகளில் பயன் படுத்தப்படுவது.

trigonometry : கோணவியல் : முக்கோணங்களின் பக்கவாட்டுகள் மற்றும் கோணங்கள் ஆகியவற்றின் உறவுகள் மற்றும் இந்த உறவுகளுக்கான பல்வேறு குறிக்கணக்கியல் முறை பணிகள் ஆகியவைப் பற்றி ஆராயும் கணிதவியலின் பிரிவு. சரியான