பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

true image

1481

TSAPI


பத்தின் நிரப்பு எண் மற்றும் இரண்டின் நிரப்பு எண்ணுக்கு உடன்பாட்டுச் சொல்.

true image : உண்மைத் தோற்றம் : நுண் மென்பொருளின் மேம் படுத்தப்பட்ட பிற்சேர்க்கை வரிமொழி மாற்றி. பிற்சேர்க்கை வகை 1 மற்றும் உண்மை வடிவ எழுத்துகளை இது அச்சிடுகிறது.

True Type : மெய்வகை : ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1991இல் அறிமுகப்படுத்திய வெளிக்கோட்டு எழுத்துருத் தொழில்நுட்பம். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது ஒரு விசிவிக் (WYSIWYG) எழுத்துருத் தொழில்நுட்பம் ஆகும். அதாவது, திரையில் காணும் எழுத்து வடிவங்கள் அப்படியே அச்சில் கிடைக்கும்.

truncate : துணிப்பு;துணித்தல் : 1. துல்லியத்தை குறைத்து ஒரு எண்ணின் இறுதி எண்களை வெளியேற்றுதல். சான்றாக, 'பை'வரிசைகளை 3. 14159 என்ற எண் துணிப்புச் செய்கிறது. எப்படியென்றால், இந்த எண்ணை எல்லையின்றி நீட்டிக்கலாம். 2. ஒதுக்கப்பட்ட இடத்தில் பொருந்தாத எழுத்துகளை வெட்டுதல். சான்றாக Rumplestritskin என்ற பெயரை அச்சிட்ட அறிக்கையில் பத்து எழுத்துப் பெயர்ப் புலத்தில் பொருத்த வேண்டு மென்றால் அப்பெயரை rumplestil என்று சுருக்குதல்.

truncation error : சுருக்குவதில் பிழை;துணிப்புப் பிழை : சுருக்கு வதனால் ஏற்படும் பிழை.

trunk : தொலை : இரண்டு தொலைபேசி பொத்தான் அமைப்பு மையங் களுக்கு இடையில் ஏற்படும் நேரடிக் கம்பி இணைப்பு.

truth table : உண்மைப் பட்டியல்;மெய்நிலை அட்டவணை : ஒரு இருமை மின்சுற்று உருவாக்குகின்ற உள்ளீட்டு/வெளியீட்டுக் கூட்டல்களின் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பட்டியலிடல்.

try : முயல்.

TSAPI : டீசாப்பி;டீஎஸ்ஏபீஐ : தொலைபேசிச் சேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Telephony Services Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் தொலைபேசி அமைப்புக்கும் ஒரு கணினிப் பிணைய வழங்கனுக்கும் இடையேயான இடைமுகத்துக்