பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tutorial programme

1486

tween


பயிற்சிக் கையேடு. அச்சிடப்பட்ட ஆவணமாகவோ அல்லது நாடா அல்லது தட்டின்மீது காந்த வடிவில் பதிவு செய்யப் பட்டதாகவோ இருக்கலாம்.

tutorial programme : பயிற்சி நிரல் தொடர் : பயிற்சி செயல் முறை : புதிய பொருளை விளக்கி அதன் பிறகே பயனாளரிடம் வைத்திருக்கக்கூடிய வகையில் விளக்கும் கணினி நிரல் தொடர்.

. tv : . டீவி : ஒர் இணைய தள முகவரி தூவாலு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

TV : டிவி;தொலைக்காட்சி : Television என்பதன் குறும்பெயர்.

TVT : டி. வி. டி : Television Typewriter என்பதன் குறும்பெயர். தொலைக்காட்சிப் பெட்டியை கணினி முனையமாக மாற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசைப்பலகை மற்றும் மின்னணுச் சாதனம். ஒளிக்காட்சி முனையம் (வீடியோ டெர்மினல்).

TV Terminal : டி. வி. முகப்பு;தொலைக்காட்சி முனையம் : கணினி வெளியீட்டுச் சாதனமாகப் பயன்படும் பொது தொலைக்காட்சிப் பெட்டி.

. tw : . டி. டபிள்யூ : ஒர் இணைய தள முகவரி தைவான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

TWAIN : ட்வய்ன் : ஒர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில் நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு பொறியொத்த படிமக் கவர்வு சாதனங்களுக்கும் இடையேயான, ஏற்றுக் கொள்ளப்பட்ட செந்தர இடைமுகம். ஏறத்தாழ அனைத்து வருடு பொறிகளிலும் ட்வய்ன் தொழில் நுட்பம் உள்ளது. மென்பொருள்களிலும் அத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

tweak : நுண் இசைவிப்பு : ஒரு கருவியின் பகுதியை மேம்படுத்தும் பொருட்டு சரி செய்தல் அல்லது நன்றாக ஒத்தியயைவு (tune) செய்தல்.

tween : இடையுரு;இடையாள் : கணினி வரைகலையில் உருமாற்ற (morphing) நிரலில் தொடக்க உருவுக்கும் இறுதி உருவுக்கும் இடைப்பட்ட உருவங்களைக் கண்டறிதல்.