பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

two way branching

1489

type


களாகக் கட்டமைக்கப்படுகின்றன. (1) பயனாளர் இடைமுகம்/வணிகத் தருக்க அடுக்கு. (2) தரவுத்தள அடுக்கு. நான்காம் தலைமுறை மொழிகள் (4GLs), இந்தவகை ஈரடுக்குக் கிளையன்/வழங்கன் கட்டுமானம் செல்வாக்குப் பெற்று விளக்குவதற்கு உதவின.

two way branching : இருவழிப் பிரிதல், இருவழி கிளைத்தல்.

two-wire cable : இரண்டு கம்பிகுழாய் : ஒரு கம்பி வடத்தில் உள்ள கடத்திகள் ஒன்றை யொன்று மின்சாரத்தால் தாக்காவண்ணம் பாதுகாக்கப் பட்டுள்ளன. மேலே மூடப்படும் கம்பி மின்பாதுகாப்பு உள்ளது. வெளிப்பக்க உறை பீவிசி என்று அழைக்கப்படுகிறது. மின் தடுப்புச் செய்யப்பட்ட கம்பி வடத்தில் உள்ள இரண்டு கடத்திகளும் கம்பிவடம் நெடுகிலும் முறுக்கப் பட்டு'இணை'என்று அழைக்கப்படுகின்றது.

two-wire line : இரண்டு கம்பி : வெற்றுக் கடத்திகளைப் பயன்படுத்தி தந்திக் கம்பிகளின் மேல் காப்புறைகளை உருவாக்குதல். குறை மின்சுற்று ஆகி தரவு தொடர்புத் தடை ஏற்படாமல் இருக்கும் கம்பிகள் ஒன்றை யொன்று தொட அனுமதிக்கக் கூடாது.

TXD : டீஎக்ஸ்டி : தகவலை அனுப்ப (Transmit Data) என்பதன் சுருக்கம். அனுப்பப்படும் தரவுவை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப் பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும். கணினியிலிருந்து இணக்கிக்கு ஆர்எஸ்-232. 2 இணைப்புகளில் இரண்டாவது பின்.

. txt : . டிஎக்ஸ்டீ : ஆஸ்கி உரைக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும். டீஎக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இவ்வகைக் கோப்புகளை எந்த உரைத் தொகுப்பான் அல்லது சொல் செயலிகளிலும் கையாள முடியும்.

Tymnet : டிம்நெட் : நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நிகழ் நிலைச் சேவைகளோடும், இணையச் சேவையாளர்களோடும் இணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பொதுத் தரவுப் பிணையம்.

type : வகை : 1. தரவு அல்லது சொல்நுழைவில் விசைப்