பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ultra SCSI

1495

unbudle



பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப்பட வில்லை. பொதுவாக, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொருள்கூறுகள் இருப்பின் இந்த வகையில் சேர்க்கலாம். சுருக்கமாக யுஎல்எஸ்ஐ எனப்படும்.

ultra SCSI : அதிவேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 தரத்தின் நீட்டித்த வரன்முறை. வேக ஸ்கஸ்ஸியின் பரிமாற்ற வீதத்தைப் போல இரண்டு மடங்கு வேகம் கொண்டது. 8-பிட் இணைப்பில் வினாடிக்கு 20 மெகாபைட் வீதமும், 16-பிட் இணைப்பில் 40 மெகாபைட் வீதமும் அனுப்பும் திறன் கொண்டது.

ultrasonic : கேளாஒலி : மனிதர்கள் கேட்கும் அளவுக்கு அதாவது 20 கிலோ ஹெர்ட்சுக்குமேற்பட்டது.

ultraviolet light : புற ஊதா ஒளி : பார்க்கக்கூடிய ஒளியைவிட சிறியதான ஆனால் எக்ஸ் கதிர்களைவிட நீண்ட கதிர்களைக் கொண்ட ஒளி. அழிக்கக்கூடிய ப்ராமில் (Prom) எழுதப்பட்ட தரவுகள் அல்லது நிரல்களை அழிக்கப்பயன்படுத்தப்படுவது. ஈப்ராமை அழிப்பதற்கு, ப்ராம் நிரல் தொடர்கள் மூலம் மீண்டும் நிரல்தொடர் அமைக்க முடியும்.

ultra-violet radiations : புற ஊதாக் கதிர் வீச்சு.

unary : ஒரும.

unary operation : ஓருறுப்புச் செயல்.

unary operator : ஓருறுப்பு இயக்கி : எதிர்மறைபோன்ற ஒரே ஒரு கூறினைக் கொண்டுள்ள கணித இயக்கி.

unattended operation : ஆளில்லாத இயக்கம் : இயக்குபவர் இல்லாமல் தரவு அனுப்புதல்/ பெறுதல்.

unbuffered : இடையகமற்ற : பெற்ற தரவுகளை இடைநிலை நினைவகத்தில் சேமித்துவைத்துப் பிறகு செயலாக்குவதற்குப் பதிலாக, பெற்றவுடனேயே செயலாக்கத்துக்கு உட்படுத்திவிடுகிற தன்மையைக் குறிக்கிறது.

unbundle : கட்டுப்பிரித்தல் : ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல். (எ-டு) எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ்