பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

undo

1498

unibus



சொல்லாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. (எ-டு) First_Name, Basic_Pay அடிக்கோடு (underline) வேறு, அடிக் கீறு (underscore) வேறு. அது போலவே இணைப்புக் குறி யும், அடிக்கீறும் வேறுவேறு.

undo : முன்செயல் நீக்கு : சொல் செயலாக்கக் கட்டளை. முந்தைய கட்டளைகளை செயலற்றதாக ஆக்கி சொற்பகுதியை மீண்டும் முன்பிருந்தது போலவே மாற்றுவது.

undock : பிரி; விலக்கு : 1. பிணைக்கப்பட்ட பணி நிலையக் கணினியிலிருந்து மடிக் கணினியைப் பிரித்தெடுத்தல். 2. கருவிப் பட்டையை சாளரத்தின் விளிம்பிலிருந்து பிரித்தெடுத்து வேறிடத்தில் வைத்தல். இதனால் கருவிப் பட்டை, விருப்பப்படி நகர்த்திச் செல்லும்படியான தனிச் சாளரமாக ஆகிவிடும்.

unerase : மீட்டெடு : முன்பே அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டுவர உதவும் சில பயன்பாட்டு மென் பொருள் நிரல். கோப்பை அழிப்பது என்பது கோப்பு ஒதுக்கும் பட்டியல் நுழை வினை மட்டுமே அழிக்கிறது. தரவுகள் பொதுவாக நீக்கப்படுவதில்லை.

unexpected halt : எதிர்பாரா இடை நிறுத்தம்.

unformat : வடிவமைப்பை மாற்று : ஒரு டாஸ் கட்டளை. தவறுதலாக வடிவமைக்கப்பட்ட தரவுகளை வட்டிலிருந்து எடுப்பதற்கு உதவும்.

unformatted I/O : வடிவமைக்கப்படாத உ/வெ : அமைப்புக் கட்டுப்பாடு செய்யப்படாமல் தரவுகளைப் படித்தல்/எழுதல்.

unfreeze columns : அணைத்து நெடுக்கையும் விடுவி.

unhandled exception : கையாளா விதிவிலக்கு : இயக்கநேரப் பிழைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கையாளும் நிரல் கூறுகளை நிரலர் எழுத வேண்டும். இது விதிவிலக்குக் கையாளுதல் (Exception Handling) என்றழைக்கப்படுகிறது. நிரலர் கையாளாத பிழை, இயக்க நேரத்தில் ஏற்படுமெனில், இயக்க முறைமை நிரலைப் பாதியிலேயே முடித்துவிடும்.

ungroup : குழு கலை.

unhide : வெளிக்கொணர்.

unhide columns : நெடுக்கைகள் வெளிக்கொணர்.

unibus : ஒற்றைப்பாட்டை : அதிவேக தரவுத் தொடர்பு பாட்டை