பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uninitialized

1501

USA Standards Institute



வடிவமைப்பு, வரைவு, பொறியியல் ஆய்வு மற்றும் எண் கட்டுப்பாடு, தரவு உருவாக்கம் போன்ற பயன்பாடுகளின் அடிப்படையை உருவாக்குகிறது.

uninitialized : ஆரம்பிக்கப்படாத : ஒரு பெறுமிடம், சேமிப்பிடம், மாறிலி மற்றும் இவை போன்றவற்றின் ஆரம்ப மதிப்பு தருதல்.

uninstall : நிறுவியது நீக்கு; நிறுவுகை நீக்கு : ஒரு கணினியில் நிறுவப்பட்ட மென் பொருள் தொகுப்பை முற்றிலுமாக நீக்கிவிடுதல். விண்டோஸ் 95/98/என்டி முறைமைகளில் ஒரு மென்பொருளை நிறுவும் போது, சில கோப்புகளை முறைமைக் கோப்புறையில் எழுதிக் கொள்ளும். அம்மென் பொருளின் தகவமைவுகளை பதிவேட்டிலும் (Registry) குறித்துக் கொள்ளும். எனவே ஒரு மென்பொருளை சாதாரண முறையில் அழித்தோம் (Delete) எனில் மேற்சொன்ன தரவுகள் நீக்கப்படாமல் தங்கிப்போகும். பின்னாளில் தொல்லையேற்படும். எனவே, நிறுவுகை நீக்கல் முறையிலேயே ஒரு மென் பொருளை அகற்ற வேண்டும்.

union : ஒன்றல் : உறவுமுறை தரவுத் தளத்தில், இரண்டு கோப்புகளை ஒன்று சேர்த்தல்.

union-compatible : இணைக்கத்தகு : தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.

unipolar : ஒரு துருவம் : ஒரு துருவம் மட்டும் கொண்டது.

unit : அலகு : சிறப்புப் பணி உள்ள எந்த ஒரு சாதனமும், கணித தருக்க அலகு, மையச் செயலக அலகு அல்லது காந்த நாடா அலகு.

unit, audio response : கேட் பொலி உணர் அலகு; கேட் பொலி உணர்பாகம்.

unit, central control : மையக் கட்டுப்பாட்டகம்.

unit, central processing : மையச் செயலகம்.

unit, control : கட்டுப்பாட்டகம்.

United States of America Standards Institute : அமெரிக்க நாட்டுத் தர நிறுவனம் (USASI) : அமெரிக்கத் தேசியத் தர நிறுவனத்தின் (ANSI) முந்தைய பெயர்.