பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Universal Server

1503

UNIX shell scripts



யாளர்களையும், பொருள்களையும் அடையாளம் காண உதவுவது. 10 இலக்கு இலக்கப் பட்டையை அச்சிடுவதற்கான அச்சுப்பொறிகளையும், பேரங்காடியிலிருந்து வெளியேறும் போது குறியீடுகளை படிப்பதற்கான வருடி ஒளிச்சாதனங்களையும் பலதரப்பட்ட உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதில் 5 இலக்கம் உற்பத்தியாளரை அடையாளம் காணவும், 5 இலக்கம் உற்பத்திக் குறியீட்டு எண்ணாகவும் செயல்படுகிறது.

Universal Server : யுனிவர்சல் செர்வர் (உலகளாவிய வழங்கன்) : 1. ஆரக்கிள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள். ஒரு ஹெச்டிடீபீ கோரிக்கையின் அடிப்படையில் உரை, ஒலி, ஒளிக்காட்சி போன்ற பலவித மான தரவுகளை தனது தரவு தளத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் மென்பொருள். 2. இன்ஃபார்மிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தரவுத் தள மென்பொருள். பயனாளருக்குத் தேவையான குறிப்பிட்ட தரவு இனங்களைக் கையாளவும், குறிப்பிட்ட வழிமுறையில் செயலாக்கவும் பல்வேறு மென்பொருள் கூறுகளுடன் செயல் படக்கூடியது.

universal time coordinate : உலகளாவிய நேர மதிப்பு : இணையத்தில் கணினிகளுக் கிடையேயான ஒத்திசைவு கருதிப் பயன்படுத்தப்படும் நேரம். பெரும்பாலும் கிரீன்விச் சராசரி நேரமாகவே இருக்கும்.

UNIX : யூனிக்ஸ்; செயல்பாட்டு நிரல்; இயக்க அமைப்பு வகையில் ஒன்று : ஏடி&டி, பெல் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்ட செயல்பாட்டு அமைப்பு. கணினிகளுக்கு என்று உருவாக்கப்பட்ட இது, பின்னர் நுண் கணினிகளில் ஏற்கப்பட்டது.

UNIX shell account : யூனிக்ஸ் செயல்தளக் கணக்கு : யூனிக்ஸ் முறைமைக்குக் கட்டளைவரி மூலமான அணுகலைத் தருகிறது. உரை வடிவிலானத் தரவுகளை மட்டுமே பெறமுடியும். வரைகலை வடிவிலான தரவுகளைப் பெறுவது சாத்தியமில்லை.

UNIX shell scripts : யூனிக்ஸ் செயல் தளக் உரைநிரல்கள் : வரிசையாக எழுதப்பட்டு கோப்புகளில் சேமிக்கப்பட்டு நிரல்களாக இயக்கவல்ல, யூனிக்ஸ் கட்டளைகள். எம்எஸ் டாஸில் தொகுதிக் கோப்பு (. bat) இத்தகு வசதியை நல்குகிறது.