பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

URL

1508

USB



சில செய்திகள் ஆபத்தைச் சுமந்து வருவதும் உண்டு. மின்னஞ்சலின் கருப் பொருளாக ஆர்வத்தைத் தூண்டும் செய்தி இருக்கும் அம்மடலைத் திறந்தால் உங்கள் கணினியில் நச்சுநிரல் குடியேறிவிடும்.

URL : யுஆர்எல் : ஒரு சீரான வள இடங்காட்டி எனப் பொருள்படும் Uniform Resource Locator என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் வளம் ஒன்றின் இருப்பிடம் காட்டும் முகவரி. இணைய வளங்களைக் கண்டறிய உலாவிகள் இந்த முகவரியையே பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் யுஆர்எல், அவ்வளத்தை அணுகப் பயன்படும் நெறிமுறையின் பெயரைத் தொடக்கத்தில் கொண்டிருக்கும். வளம் சேமிக்கப்பட்டுள்ள வழங்கனின் பெயர் அடுத்து இடம் பெறும். அடுத்து களப் பிரிவு இடம் பெறுவதுண்டு. (எ-டு). http : //www. microsoft. com.

. us : . யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பா நெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப் பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, . com, . gov, . edu, . org, .. mil, . net ஆகிய மேல் நிலைக் களப் பெயருக்கு அடுத்து . us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத் தளங்கள் . gov. us, . mil. us என்பது போன்ற பின்னொட்டுகளைப் பெறும்.

usability : பயன்படுத்தக்கூடிய தன்மை : ஒரு கணினி அமைப்பைப் பயன்படுத்துபவர் அதன் தகுதி பற்றி மதிப்பீடு செய்தல்.

usable : பயன்படத்தகு : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப் பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது, நெளிவு சுளிவாக உள்ளது. பிழைகளின்றி உள்ளது. தேவையற்ற குழப்பமான செயல்முறைகள் இல்லாத சிறந்த வடிவமைப்பைப் பெற்றுள்ளது என்று பொருள்.

USB : யுஎஸ்பி : உலகளாவிய நேரியல் பாட்டை என்று பொருள்படும் Universal Serial Bus என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.