பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

user agent

1510

user defined key



இதுபோன்ற கணக்குகளை முறைமை நிர்வாகி உருவாக்குகிறார். பயனாளர் கணக்கு என்பது, பயனாளர் பெயர், நுழைசொல், உரிமைகள், அனுமதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கம்.

user agent : பயனாளர் முகவர் : குறும் பரப்புப் பிணையங்களுக்காக ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில், கிளையன் கணினி, வழங்கனுடன் இணைத்துக்கொள்ள உதவும் ஒரு நிரல்.

user and group accounts : பயனாளர், குழுக் கணக்குகள்.

user and group permissions : பயனாளர், குழு அனுமதிகள்.

user-defined characters : பயனாளர் வரையறுக்கும் எழுத்துகள் : பயனாளரால் வரையறுக்கப்பட்டு சேமிக்கப்படும் எழுத்துகள்.

user-defined data type : பயனாளர் வரையறுக்கும் தரவு இனம் : நிரலொன்றில் நிரலர் வரையறுக்கும் தரவு இனம். நிரலாக்க மொழியில் இருக்கும் மூலத் தரவுகளிலிருந்து மாறுபட்டது. பயனாளர் உருவாக்கும் தரவினம் மூலத் தரவிகளின் சேர்க்கையாகவே இருக்கும். பெரும்பாலும் தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கப்பயன்படும். (எ-டு) : சி - மொழியில்

struct employee

{

chan name [15];

int age;

float wage;

}

struct employee e1, e2;

user-defined exception : பயனாளர் வரையறு விதிவிலக்கு.

user-defined function : பயனாளர் வரையறுக்கும் பணி; பயனாளர் வரையறைச் சார்பலன் : முன்வரையறை பணியைச் செய்வதற்கான நிரல் தொடரின் பகுதி அல்லது கூறு ஆக அமையும் ஒரு தொகுதி அல்லது குழு நிரல்கள்.

user defined function key : பயனாளர் வரையறுக்கும் பணி விசை.

user defined key : பயனாளர் வரையறுக்கும் விசை : கணினி விசைப்பலகையில் உள்ள ஒரு விசை. அதன் பணி முன்பே வரையறுக்கப்படுகிறது அல்லது கணினி இயங்கும்போது நிரல் தொடர்மூலம் மாற்றப்படுவது. அந்த விசையை அழுத்தும் போது குறிப்பிட்ட பணி செய்யப்படும்.