பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

user files

1511

user interface tier



user files : பயனாளர் கோப்புகள்.

user-friendly : பயனாளர் தோழமையான : எளிதாகப் பயன்படுத்து வதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மென்பொருள்/வன்பொருள் குறித்துப் பயன்படுத்தப்படும் சொல். சிக்கலான நடைமுறைகளைப் பயனாளர் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பட்டறிவு இல்லாதவர்களும் பயன்படுத்த மிக எளிது.

user-friendly software : பயனாளர் - தோழமை மென்பொருள் : அளவான கணினி பின்னணி கொண்டவர்களும் கற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ள நிரல் தொடர் மற்றும் அமைப்புகளைக் குறிப்பிட இத் தொடர் பயன்படுத்தப்படுகிறது.

user group : பயனாளர் குழு : ஒரு கணினி அல்லது ஒரு உற்பத்தியாளரின் ஒருவகைக் கணினிகளை பயன்படுத்தி நிரல் தொடர்களை அமைப்பவர்கள் தாங்கள் பெற்ற அறிவைப் பங்கு கொள்ள அமைத்துக் கொண்ட குழு. தரவு பரிமாற்றம், நிரல் தொடர்கள் மற்றும் வணிகக் கருவிகளைப் பங்கிடல், கணினியின் வன்பொருள், மென்பொருள் மற்றும் செயல்பாடுகளைக் குறித்து ஆலோசனையைத் தருதல்/பெறுதல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது. ஒருவர் வாங்கவிரும்பும் அல்லது பயன்படுத்த விரும்பும் ஒரு பொருள் பற்றி அதைப் பயன்படுத்தியவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம். செய்தி அறிக்கைகளும் பயனுள்ளதரவுகளைத் தருகின்றன.

user interface : பயனாளர் இடைமுகம்; பயனாளர் இடைப்பாடு : பயனாளர் கணினியுடன் சேர்ந்து செயல்பட உதவும் பட்டியல்கள், திரை வடிவமைப்பு, விசைப்பலகை கட்டளைகள், கட்டளைமொழி மற்றும் உதவித் திரைகள் போன்றவை. சுட்டி மற்றும் தொடுதிரை போன்றவையும் இதில் சேரும்.

user interface design : பயனாளர் இடைமுக வடிவமைப்பு : உள்ளீடு/வெளியீடு முறைகள் மற்றும் மனிதர் படிக்கக்கூடியவற்றுக்கும் எந்திரம் படிக்கக் கூடிய படிவங்களுக்கும் இடையிலானவை உள்ளிட்ட பயனாளர்களுக்கும், கணினி அமைப்புகளுக்கும் இடையிலான இடைச் செயல்களும் வடிவமைப்பும்.

user interface tier : பயனாளர் இடைமுக அடுக்கு.