பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

variable address

1520

. va. us


இதனை தரவு வகை என்றும் கூறுவர்.

variable address : மாறு முகவரி.

variable block : மாறு தொகுதி.

variable expression : மாறு நிலைத் தொடர் : குறைந்த பட்சம் ஒரு மாறிலியை (variable) அடிப்படையாகக் கொண்டுள்ள கணக்கீட்டுத் தொடர். எனவே நிரல் இயங்கும்போது கட்டாயமாக மதிப்பு கணக்கிட வேண்டிய தொடராக இது இருக்கும்.

variable field : மாறுபுலம்.

variable length : மாறு நீளம்.

variable length field : மாறு நீளப்புலம் : பல்வேறு நீளங்களுடைய மதிப்புகளைக் கொண்டிருக்கும் புலம்.

variable-length record : மாறுநீள ஏடு : மாறுநீளப் புலங்களைக் கொண்டுள்ள ஏடு. அல்லது மாறுபட்ட எண்ணிக்கையிலான புலங்களைக் கொண்டுள்ள ஏடு. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில புலங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இதன் காரணமாய் தரவுத்தளத்தில் ஒவ்வொரு ஏடும் வெவ்வேறு நீளத்தில் இருக்க வாய்ப்புண்டு.

variable name : மாறிலியின் பெயர் : ஒரு செயல்முறையில் ஒரு தரவு மதிப்பளவை அடையாளங்காட்டும் எழுத்தெண் சொல். இது, மதிப்பளவுகளின் தொகுதியில் எந்த மதிப்பையும் எடுத்துக் கொள்ளலாம்.

variable register : மாறிலிப் பதிவகம் : ஒரு மாறிலியின் மதிப்பை இருத்தி வைக்கும் பதிவகம்.

variable resistor : மாறு மின்தடை.

variables : மாறிலிகள்.

variable word length : மாறியல் சொல் நீளம் : இது ஒர் எந்திரச் சொல் அல்லது இயக்கப்படு எண் தொடர்பானது. இதில், துணுக்குகள், எட்டியல்கள், எழுத்துகள் ஆகியவற்றில் மாறியல் எண்ணிக்கை அடங்கியிருக் கும். இது நிலைச் சொல் நீட்சி என்பதிலிருந்து வேறுபட்டது.

variation : மாறுபாடு

varname (Variable name) : மாறிலிப் பெயர் : variable name என்பதன் குறும்பெயர். ஒரு மாறிலியின் பெயரைக் குறிப்பிடும் சுருக்கம்.

VAX : வாக்ஸ் : பெரிய நுண் கணினிப் பொறியமைவுகளுக்கான பெயர். இதனை எண் மானச் சாதனக் கழகம் தயாரிக்கிறது.

. va. us : . விஏ. யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி