பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vertical scrolling

1527

very large scale integration


கிறது என்பது. காண முடியாத, மறுக்கத்தக்க மின் வீச்சுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இது 50 ஹெர்ட்சுகளைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

vertical scrolling : செங்குத்துச் சுருளாக்கம் : ஒரு பக்கத்தின் வழியே தரவுகளை மேலும் கீழும் நகர்த்துவதற்கான அல்லது ஒளிப்பேழைத் திரையில் காட்டுவதற்கான ஒரு பொறியமைவின் திறன்.

vertical sync signal : செங்குத்துச ஒத்திசைவுச் சமிக்கை : கிடை வரி முறைத் திரைக்காட்சியில், காட்சியின் அடிப்பகுதியில் முந்தைய வருடு கோட்டின் முடிவைக் காட்டுகின்ற ஒளிக் காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி.

very high speed integrated circuit : மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று : மிக அதிகவேகத்தில் செயல்பாடுகளை, குறிப்பாக தருக்கநிலைச் செயல்பாடுகளை நிறைவேற்றக் கூடிய ஒர் ஒருங்கிணைப்பு மின்சுற்று.

Very Large Database : மிகப் பெரும் தரவுத்தளம் : நூற்றுக்கணக்கான கிகாபைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தரவுகளைக் கொண்ட தரவுத் தள அமைப்பு. பொதுவாக மிகப் பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும். கோடிக்கணக்கான ஏடுகள் உள்ள ஆயிரக்கணக்கான அட்டவணைகளைக் கொண்டிருக்கும். வேறுவேறு பணித் தளங்களிலும், வெவ்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படுவதாக இருக்கும். பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுடன் இயைந்து செயல்படுவதாக இருக்கும்.

Very Large Memory : மிகப்பரந்த நினைவகம் : மிகப்பெரும் தரவுத் தளத்தோடு தொடர்புடைய மிகப்பெரும் தரவு தொகுதிகளைக் கையாள்வதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு நினைவக அமைப்பு. முதன்மை நினைவகத்தை அணுகுவதற்கு 64 துண்மி (பிட்) ரிஸ்க் (RISC) தொழில்நுட்பத்தை இந்தவகை நினைவகங்கள் பயன்படுத்துகின்றன. ஒரு கோப்பின் அளவு 2 மெகாபைட் வரை இருக்கலாம். 14 ஜி. பி நினைவகத்தை இடைமாற்று நினைவகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

very large scale integration (VLSI) : பேரளவு ஒருங்கிணைந்த மின்சுற்றுகள்; மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு : மிகப் பெருமளவு (1000 முதல்