பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video capture device

1531

video conferencing



வரியும் ஒரு முறை நுண்ணாய்வு (ஸ்கேன்) செய்யப்பட்டு சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களைக் கோடுகளிலிருந்து வடிகட்டி மாறும் சமிக்கைகளாக அனுப்பப்படுகிறது. பெரும்பாலான ஒளிக் காட்சி படப்பிடிப்புக் கருவிகள் ஒப்புமை (அனலாக்) தான். ஆனால் இலக்கமுறை படப்பிடிப்புக் கருவிகளும் உள்ளன.

video capture device : ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம் : தொடர் முறை ஒளிக்காட்சிச் சமிக்கைகளை இலக்கமுறை வடிவில் மாற்றி, கணினியின் நிலை வட்டில் அல்லது வேறு பெருஞ்சேமிப்புச் சாதனத்தில் பதிவு செய்கிற ஒரு விரிவாக்கப் பலகை. சில ஒளிக்காட்சிக் கவர்வு சாதனங்கள், இலக்க முறை ஒளிக்காட்சிகளை விசி ஆரில் பயன்படுத்துவதற்கேற்ற தொடர்முறை சமிக்கைகளாக மாற்றும் திறன்படைத்தவை.

video card : ஒளிக்காட்சி அட்டை : ஒரு ஒளித்திரைக்கான கட்டுப்பாட்டு இடைமுகம்.

video clip : ஒளிக்காட்சித் துணுக்கு : ஒரு நீண்ட ஒளிக் காட்சிப் பதிவிலிருந்து துணித்து எடுக்கப்பட்ட ஒரு குறுகிய காட்சியை உள்ளடக்கிய கோப்பு.

video code : ஒளிக்காட்சிக் குறியீடு : என். டி. எஸ். சி ஒளிக்காட்சியை இலக்கக் முறை குறியீடாகவும், தலைகீழாகவும் மாற்றும் மின்சுற்று. சுருக்க நுட்பத்தை உள்ளடக்கி தரவுகளைக் குறைக்கிறது. முழு இயக்க ஒளிக்காட்சியாக இருக்கலாம் அல்லது இல்லாமற் போகலாம்.

video compression : ஒளிக்காட்சி இறுக்கம் : இலக்கமுறை வடிவில் பதிவு செய்யப்பட்ட ஒளிக்காட்சிப் படிமங்கள் கொண்ட கோப்புகளை இறுக்கி அளவினைச் சுருக்கும்முறை. இறுக்கிச் சுருக்கப்படவில்லையெனில், 24துண்மி (பிட்) நிறம் கொண்ட 640x480 படப்புள்ளி தெளிவுள்ள ஓர் ஒளிக்காட்சிப் படத்தின் ஒரு சட்டம் ஒரு மெகாபிட் அளவிருக்கும். ஒரு நிமிடப் படம் ஒரு கிகாபைட் அளவிருக்கும். படிமத்தின் இயல்பான தரம் குறையா வண்ணம் ஒளிக்காட்சி இறுக்கம் சாத்தியம்.

video conferencing : ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்; காட்சி வழி உரையாடல்; ஒளிக்காட்சிக் கருத்தரங்கு நிகழ்பட கலந்துரையாடல் : தொலைவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு ஒரு கலந்துரையாட லில் பங்கு பெறுவோர் தத்தம்