பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video display page

1533

video graphics adapter



தேவையான ஒளிக்காட்சித் தரவுகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு.

video display page : ஒளித்தோற்ற காட்சிப்பக்கம் : ஒரு முழுத் திரைப் படிமத்தைக் கொண்டுள்ள, கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி. இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை புதுப் பித்தல் மிகவேகமாக நிறைவு பெறமுடியும். ஏனெனில் ஒரு பக்கம் திரையில் காட்டப் பட்டுக் கொண்டிருக்கும்போது பார்க்கப்படாத பக்கத்தை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும்.

video driver : ஒளிக்காட்சி இயக்கி : ஒளிக்காட்சித் தகவி வன்பொருளுக்கும் இயக்க முறைமை உட்பட பிற நிரல்களுக்கும் இடையே ஒர் இடை முகத்தை வழங்கும் மென் பொருள். திரையில் தெரியும் படிமங்களின் தெளிவு மற்றும் நிற ஆழத்தைப் பயனாளர் இந்த இயக்கி நிரல் மூலமாக விருப்பப்படி மாற்றியமைக்க முடியும்.

video editor : ஒளிக்காட்சித் தொகுப்பி : ஓர் ஒளிக்காட்சிக் கோப்பின் உள்ளடக்கத்தை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் அல்லது நிரல்.

video game : ஒளிக்காட்சி விளையாட்டு : கணினித் திரையில் வரைகலையாகக் காட்டப்படும் நடவடிக்கையைத் திறமையுடன் கையாண்டு ஆடும் ஆட்டம். சொந்தக் கணினிகளிலும், கேளிக்கை விடுதிகளிலும் இது மிகுதியாக ஆடப்படுகிறது.

video game machine : ஒளிக்காட்சி விளையாட்டுப் பொறி : ஒரு ஒளிக்காட்சி விளையாட்டில் காட்சியைக் கட்டுப்படுத்தும் சைகைகளை உண்டாக்குகிற சாதனம்.

video gate array : ஒளிக்காட்சி வாயில் வரிசை : பீசிக்களின் ஒளிக்காட்சிக் கணினியில் உள்ள ஒரு சிப்பு. வண்ணத் தட்டுப் பதிவுகள் உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு மற்றும் நிலைப் பதிவேடுகளை அது கொண்டிருக்கிறது.

video generator : ஒளிக்காட்சி உருவாக்கி : ஒளிக்காட்சியை உருவாக்கும் சாதனம்.

video graphics adapter card : ஒளிக்காட்சி வரைகலைத் தகவி அட்டை.