பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viewport

1537

virtual control programme



பொருள். எடுத்துக்காட்டு : ஜிஃப், ஜேபெக் கோப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள படிமங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் காட்சிப்படுத்தும்.

viewport : காட்சித்துறை : ஒளிப்பேழைக் காட்சித்திரையில் தெரிந்தெடுத்த ஓர் அமைவிடத்தில் தெரிந்தெடுத்த படம் எதையும் பயன்பாட்டாளர் வைப்பதற்கு அனுமதிக்கிற செய்முறை.

vine : வைன்; படர்கொடி : ஒலி நாடாத் தரவுவை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக் கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர் கொடி நாடாக்களில் இலக்க முறை வடிவத்தில் தரவு பதியப்படுகிறது. எனவே நகலெடுப்பதால் ஒலியின் தரம் குறைந்து போவதில்லை.

virtual : தோற்றநிலை; உண்மை போன்ற; மெய்நிகர் : தோற்ற நிலைச் சேமிப்பகத்தில் உள்ளது போன்று இயல்பாகவுள்ள நிலையாக இல்லாமல் கண்ணுக்குத் தோன்றுகிற நிலை.

virtual address : தோற்றநிலை முகவரி : தோற்றநிலைச் சேமிப்புப் பொறியமைவுகளில் தோற்ற நிலைச் சேமிப்பைக் குறிக்கிற ஒரு முகவரி. எனவே, இது, பயன்படுத்தப்படும்போது, இயல்புச் சேமிப்பு முகவரியாக மாற்றப்பட வேண்டும்.

virtual card calling : தொலைபேசி அழைப்பு அட்டை; மெய் நிகர் அட்டை அழைப்பு.

virtual channel : மெய்நிகர் தடம் : ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM) ஒரு அனுப்பியிலிருந்து ஒரு வாங்கிக்கு அனுப்பப்பட்ட ஒரு தரவு, பயணம் செய்கிற பாதை.

virtual circuit : மெய்நிகர் மின்சுற்று : அனுப்பிக்கும் வாங்கிக்கும் இடையே நேரடி இணைப்பு இருப்பது போன்று தோற்றமளிக்கும் ஒரு தகவல் தொடர்பு இணைப்பு. ஆனால் உண்மையில் அவ்விணைப்பு பல சுற்றுப்பாதைகளில் சுற்றி இணைக்கப்பட்டிருக்கும்.

virtual classroom training : மெய்நிகர் வகுப்பறைப் பயிற்சி.

virtual community : மெய்நிகர் குழுமம்; மெய்நிகர் சமூகக் குழு.

virtual control programme interface : மெய்நிகர் கட்டுப்பாட்டு நிரல் இடைமுகம் :